Published : 04 May 2015 07:28 PM
Last Updated : 04 May 2015 07:28 PM

திருநங்கைகளை வீட்டைவிட்டு துரத்தலாமா? - மோகன்பாபு

செய்தி:>திருநங்கைகளுக்காகக் கரம் சேருங்கள்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மோகன்பாபு கருத்து:

திருநங்கைகள் என்றால் பேருந்து, புகைவண்டி மற்றும் கடைத் தெருக்களில் கையைத் தட்டி காசு கேட்கும் ஓர் இனமாகத்தான் பலருக்கு தெரிகிறது. மேலும் அவர்கள் பலவகையிலும் ஏளனத்துக்கு உட்படுபவர்களாகவே தெரிகின்றனர்.

பிறந்த வீட்டில் ஊனமுற்றோ, மனவளர்ச்சி குன்றியோ பிறக்கும் குழந்தையை கூட வளர்க்கும் போது, ஒரு குழந்தை திருநங்கை என தெரியவந்தால் அதனை வீட்டை விட்டு அனுப்புவது அல்லது அக்குழந்தை அவமானம், தரித்திரியம் என நினைக்கும் இச்சமூகம் எப்போதுதான் மாறப்போகிறது. அவர்கள் பிச்சை எடுக்க இச்சமூகம் நிர்பந்திக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் இனி நடவாது இருக்க தனி நபர் மசோதா நிறைவேறியிருப்பது வரவேற்கத் தக்கது. தனி நபர் மசோதா சட்டமாவது மிக அரிதானது. அதனைச் சட்டமாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் அப்போது தான் திருநங்கை என்ற சமூகம் எவ்வித இடரும் இன்றி இச்சமூகத்தில் வாழ முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x