Published : 14 May 2015 05:04 PM
Last Updated : 14 May 2015 05:04 PM

நல்லதைக் கேட்க மாட்டீங்க: திருவட்டாறு சிந்துகுமார்

தொடர்:>சினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்!

' தி இந்து' ஆன்லைன் வாசகர் திருவட்டாறு சிந்துகுமார் கருத்து:

1995 ஆண்டு சென்னையில் எம்.ஏ. ஜர்னலிசம் பயிற்சி வகுப்பில் பாடம் நடத்த வந்திருந்தார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். அவர் அவரது சினிமா அனுபவங்களை சொல்லிக்கொண்டே போக, கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்ட(!) நம் அருகில் இருந்த நண்பர் ஒருவர்,"எடுக்குறது எல்லாம் மசாலா படம்..பெருசா பேச வந்துட்டாரு" என எஸ்.பி.எம்.ஐ கடுப்பேற்றும் விதத்தில் குரல் எழுப்பினார்.

அவர் கோபப்படாமலே பதிலளித்தார். "நான் எடுக்குறது மசாலா படம்தான். செட்டியாருக்கு நான் விசுவாசமா இருக்கேன். முதல் போடுற முதலாளிக்கு நஷ்டம் வரக்கூடாது, ரசிகர்கள் சந்தோஷமா இருக்கணும். அவ்ளோதான் எனக்குத் தெரியும்." என்றார்.

மேலும், "குடியின் தீமை பற்றி தியாகுன்னு ஒரு படம் எடுத்து இலவசமா தியேட்டர்ல திரையிட்டோம்.. எத்தனைபேர் போய் பார்த்தீங்க? நல்ல விஷயத்தை இலவசமா சொன்னா கூட கேட்க மாட்டீங்க!" என பதிலளித்தார். இதற்குப் பதிலளிக்க முடியாமல் குரல் எழுப்பியவர் கப்சிப். எஸ்.பி.எம்.மிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x