Published : 27 May 2015 06:17 PM
Last Updated : 27 May 2015 06:17 PM
செய்தி:>முஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சையது முகம்மது
முஸ்லிம்களுக்கு வீடில்லை என்ற வாசகங்களுடன் வரும் செய்திகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு ஆறுதல் அல்ல. முஸ்லிம்களை கொடுமைப்படுத்த எண்ணுவோருக்கு வழங்கும் இலவச அறிவுரை.
முஸ்லிம் அல்லாதோர் வாழும் பகுதிகளில் வாழ விரும்புவோர் தான் இது போன்ற சிரமங்களை சந்திக்கின்றனர். முஸ்லிம்களுடன் கூடி வாழும் பண்பும் ஒழுக்கமும் தனக்கான பாதுகாப்பு என்பதை இவர்களைப் போன்றோர் உணரத் தொடங்கினால் இது போன்ற செய்திகள் இருக்காது.
இந்தியாவை உத்தமர்களின் கோட்டையாக பின்பற்ற தகுந்தோர்கள் வசிக்கும் வசிப்பிடமாக நம்பும் முஸ்லிம்கள், நம்ப வைக்கும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணம். முஸ்லிம்கள், ஹிந்துக்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரோடு கூடி வாழ்வதால் தங்களின் ஒழுக்க நாகரிக பண்பாட்டு அடையாளங்களை இழக்க நேரிடும் என்பதை புரிய தொடங்கினால் இது போன்ற செய்திகள் அர்த்தமற்றதாகி விடும்.
இஸ்லாம் என்பது கடவுள் கொள்கை சார்ந்தது. பாவமான, மானக்கேடான, அநீதமான செயல்களை எண்ணங்களை விட்டு விலகி வாழ வழிகாட்டும் இறையியல். இறைவன் என்பவன் ஒருவன் அவன் குடும்பங்களோ குழந்தைகளோ கொண்டவன் அல்ல, அவன் தனித்தவன் அவனுக்கு ஒப்பீடாய் ஒன்றுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT