Published : 07 Apr 2015 12:18 PM
Last Updated : 07 Apr 2015 12:18 PM

சட்டத்தை மீறினால் தமிழர் என பரிவு காட்ட கூடாது: குமார்

செய்தி:>செம்மரக் கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் பலி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் குமார் கருத்து:

நாங்கள் சட்ட விரோத செயல் செய்ய சென்றாலும் அதனை தடுக்கக் கூடாது என்பது எப்படி நியாயமாகும்?

இந்தத் தொழிலாளர்களுக்கு இவர்கள் செய்வது சட்ட விரோதம் என்று தெரியாதா? உடனே இங்கே அப்பாவி தமிழர்கள் என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் வரும். தெரிந்து தவறு செய்யும் தமிழர்களை முதலில் நாம்தான் கண்டிக்க வேண்டும்.

2000 - 5000 ருபாய் கிடைக்கும் என்று தெரிந்து தானே வெட்ட சென்றார்கள்? வேறு மாநில கொள்ளையர்கள் இங்கு வந்து கொள்ளை அடிக்கும் பொது நாம் சுட்டுக் கொல்லவில்லையா?

சட்டத்தை மீருபவர்களுக்காக பரிந்து பேசுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இந்த வனக் பகுதியில் தமிழர்கள் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. கைது செய்யப்படும் போது நாட்டு துப்பாக்கிகளை வைத்து திருப்பி சுடுவதும் புதிதல்ல. கடந்த முறை ஒரு வனக் காவலர் இந்த துப்பாக்கி சூட்டில் இறந்தார் (கடமையை செய்த ஓர் அரசு அதிகாரி).





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x