Published : 23 Apr 2015 12:54 PM
Last Updated : 23 Apr 2015 12:54 PM
நாகா:
உங்களிடம் புதியதாக அறிமுகமாகும் நபர் உங்களிடம் ஊர்ப் பெயர், பகுதிப் பெயர் அந்தப் பகுதியில் அவருக்குத் தெரிந்தவரை உங்களுக்குத் தெரியுமா என்று விசாரித்துக் கொண்டிருந்தால் அவருக்கு மேலும் வேலை வைக்காமல் நீங்கள் நேரடியாக உங்கள் சாதி என்ன என்பதை தெரிவித்துவிடுங்கள்!
விமலாதித்த மாமல்லன்:
பெரியார்லாம் நெம்ப சின்னவர் ராஜா. ‘மதம் மக்களுக்கு அபின்'னு சொன்ன கார்ல் மார்க்ஸை மொதல்ல உள்ள புடிச்சுப்போடுங்க பாஸ்!
மனுஷ்யபுத்திரன்:
முகநூல் முழுக்க ‘ஓகே கண்மணி’தான். 20 பேர் படுகொலையிலிருந்து ஓகே கண்மணிக்கு ஸ்விட்ச் ஓவர் ஆனதை தப்புன்னு சொல்லலை... ஆனா அந்த ஸ்விட்ச் ஓவர் வேகம்தான் அயரவைக்குது… அதே அர்ப்பணிப்பு… அதே தீவிரம்...
வடக்குப்பட்டி ராமசாமி:
இது கம்பன் காணாத சிந்தனை... உன் காதுகிட்ட யார் சொன்னது?
கிருஷ்ணகுமார் அப்பு:
அட்சயத் திருதியை அன்னைக்கு ஆஸ்பத்திரி போனா வருஷம் பூரா போகணுமேனு யாரும் அன்னைக்கு ஆஸ்பத்திரி போக மாட்டாங்களா? # டவுட்டு
நரேன் ராஜகோபாலன்:
நாடு கடந்த தமிழீழத்துக்கு தலைவர் இருப்பதுப் போல, நரேந்திர மோடி ஏன் நாடு கடந்த இந்தியாவின் உலகளாவிய பிரதமராக தமக்கு தாமே முடி சூட்டிக்கொள்ளக் கூடாது?
வாட்ஸ் அப் ரவுசு:
தாலி கட்டி வாழ்ந்தா - அலைபாயுதே
தாலி கட்டாம வாழ்ந்தா - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாம இருந்தா - மௌன ராகம்
தாலி கட்டிட்டுப் புருஷனை லவட்டிட்டு போய்ட்டா - ரோஜா
தாலி கட்டிட்டு பொண்டாட்டியை லவட்டிட்டு போய்ட்டா - ராவணன்
கண்ணன்:
சுந்தர ராமசாமியின் அஞ்சலிக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பகிர்ந்துகொண்டது இது.
ஜெயகாந்தன் சென்னையிலிருந்து நெல்லை சென்று திகசி, தொமுசி இருவரையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து சுராவைப் பார்க்கிறார். எல்லோரும் கன்னியாகுமரி செல்கிறார்கள். கடற்கரையில் நடந்த ஒரு உரையாடல்:
சுரா (ஜெயகாந்தனிடம்): நீங்கள் அசப்பில் விவேகானந்தர் மாதிரி இருக்கிறீர்கள் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?
ஜெயகாந்தன் முகத்தில் மகிழ்ச்சி, பெருமிதம். முகவாயைத் தடவிக்கொள்கிறார். (இதைச் சொன்ன அன்று ஜெயகாந்தன் நடித்தே காட்டினார்!)
சுரா: சில பொய்களைச் சொன்னால் கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது இல்லையா?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT