Published : 08 Apr 2015 06:51 PM
Last Updated : 08 Apr 2015 06:51 PM

லஞ்சம் கொடுக்கும் வரை பிரச்சினை ஓயாது: சிவ பிரபு

செய்தி: >தமிழகத்தில் 119 ஓட்டுநர் பணிக்கு லஞ்சம்: தலா ரூ.1.75 லட்சம் வசூலிக்க அமைச்சர் நிர்பந்தம் - அரசு தலைமை பொறியாளர் திடுக்கிடும் வாக்குமூலம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சிவ பிரபு கருத்து:

இப்படி ஆளாளுக்கு அரசியல்வாதிகளை திட்டுகிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதற்கு நாமும் காரணம் என்று ஒப்புக்கொள்கிறோம்.

இவர்கள் ஒன்றும் கடவுளால் ஊழல் செய்யவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அல்ல. நேற்று லஞ்சம் கொடுத்து பதவி பெற்ற ஒரு சராசரி மனிதனே இன்று ஒரு லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி / அதிகாரி.

அரசியல் இன்று ஒரு தொழில் அது பதவியோ, அரசு பணியோ தனது சொந்த பணத்தையோ அல்லது கடன் வாங்கியோ முதலீடு செய்து பதவி பணியிடம் பெறுகிறார்கள். இடம் கிடைத்த பின் போட்ட முதலை எடுக்க தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயங்களில் வியாபாரம் செய்கிறார்கள். இதற்கு அதிகாரத்தின் மேல் வர்க்கம் வரை பங்குண்டு.

இன்று நடக்கும் ஒவ்வொரு அரசு துறையிலும் பெரும்பாலும் பணம் கொடுத்தே பதவி / இடமாற்றல் பெறப்படுகிறது. நேர்மையாக அல்ல.

இன்று நம்மில் எத்தனை பேர் அரசு வேலைக்கு லஞ்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்ற சூழ்நிலையில் நாம் வேண்டாம் என்று சொல்வோம். போட்டி போட்டுகொண்டு வட்டிக்கு வாங்கியாவது அதை செய்வோமல்லவா. ஆனால் குறை சொல்வதென்பது என்னவோ அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும்தான். லஞ்சம் கொடுக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த பிரச்சனை ஓயாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x