Published : 06 Apr 2015 12:11 PM
Last Updated : 06 Apr 2015 12:11 PM
செய்தி:>நீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும்: மோடி
'தி இந்து' ஆன்லைன் வாசகர் புவனேஸ்வரி கருத்து:
அதற்கு முதலில் சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் (அரசியல்வாதிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள்) எல்லோருக்கும் அவரவர் செய்யும் தவறுக்கு ஏற்ற தண்டனை கட்டாயம் அனுபவிக்க வேண்டும்.
ஏழை செய்யும் தவறு பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்கப்பட்டு சிறை தண்டனை, தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை என்று கொடுக்கப்படுவது போல் மேலே குறிப்பிட்டவர்கள் தவறு செய்தாலும் உடனடி தீவிர விசாரணை செய்யப்பட்டு தண்டனை கட்டாயம் கொடுக்கப் படவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நீதிபதியை அவர் வேலையை யாருடைய குறிக்கீடும் இல்லாமல், அவரது உயிருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் இல்லாமல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
வாய்தா வாங்கியே காலத்தை கடத்தாமல், சாட்சிகளை மிரட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் பாதுகாப்பான நீதி வழங்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT