Published : 06 Apr 2015 12:50 PM
Last Updated : 06 Apr 2015 12:50 PM

நீதித்துறையில் பாரபட்சம் கூடாது: டிகே நிதி

செய்தி:>நீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும்: மோடி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் டிகே நிதி கருத்து

நீதிமன்றங்கள் தவறு செய்தால் அவர்களை யாரும் கேளிவி கேட்க முடியாது, அவர்களாகவே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்பது இந்தியாவைப் பொருத்தமட்டில் நடக்காத ஒன்று.

ஆகவே, அவர்களைக் கட்டுப்படுத்த லோக்பால் சட்டத்தில் இணைக்கவேண்டும். தகவல் அறியும் சட்டத்தில் அவர்களையும் இணைக்க வேண்டும்.

விசாரணை நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அவை உச்ச நீதி மன்றத்தால் அடிமையாக நடத்தப்பட விடக்கூடாது.

ஒரு வழக்கை 18 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் இழுத்தடித்து, குற்றம் சாட்டப்பட்டவரை 2 முறை முதல்வராக ஆக உதவி செய்துவிட்டு, அவர் தண்டனைக்குள்ளானதும், மற்றவர்களுக்கு ஓராண்டு கழித்து பிணை கொடுக்கும்போது, இந்த முதல்வருக்கு மட்டும் 21 நாளில் பிணை கொடுத்து, 3 மாதத்தில் வழக்கை முடிக்கவேண்டும் என்று கீழ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது.

இதன் நோக்கம் என்ன?

18 ஆண்டுகள் நடந்த வழக்கில் 3 மாதத்தில் தீர்ப்புக் கூறவேண்டும் என்பதே உள்நோக்கம் கொண்டது. அது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகளை அநாவசியமாகக் கொட்டடியில் அடைத்து வைத்திருக்கின்றனர். இவை விசாரணைக்கு உடபடுத்தப் படவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x