Published : 30 Apr 2015 12:40 PM
Last Updated : 30 Apr 2015 12:40 PM
சரவணன் சந்திரன்
தாம்பரம் தாண்டி படப்பைக்குப் பக்கத்தில் என மனை விளம்பரம் ஒன்றுக்காகத் தொலைக்காட்சிகளில் பேச வைக்கப்பட்டிருக்கிறார் ‘வாராயென் தோழி வாராயோ’ எல்.ஆர். ஈஸ்வரி. “ஐம்பது பைசாவுக்குக் கால் மடக்கிக் கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்கிற மு.சுயம்புலிங்கத்தின் கவிதை வரிகள் தரும் காவிய சோகத்துக்கு நிகரான சோகம், அந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது திரள்கிறது. கடவுளே, என் சாவு மனிதர்கள் அறியாததாக இருக்கட்டும். என் பிணத்தைக் கழுகுகள் கொத்தாமலிருக்கட்டும் என்கிற வரிகள் ஏனோ நினைவுக்குவருகின்றன.
சுரேஷ் கண்ணன்
‘காஞ்சனா’ என்கிற பேய்ப் படத்தின் இடைவேளையின்போது வெளியே வரவே அத்தனை பயமாக இருந்தது; ஒரு வெஜ் பப்ஸ் அநியாயமாக ரூ. 50-க்கு விற்கிறார்கள்.
சுபகுணராஜன்
கொடைக்கானல் செல்லும் சாலையில் அந்தப் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம், பாஜக விளம்பரம் கவனத்தை ஈர்க்கிறது. விளம்பர அமைப்பாளர்களில் ஒருவர் பெயர் அண்ணாதுரை. மற்றொருவர் பெயர் ஜோதிபாசு. அவர்களுக்குப் பெயர் வைத்த ‘லட்சியவாதி’ தந்தைகள் தோற்றுப்போன ‘பிழைக்கத்’ தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
மாதவ ராஜ்
ஜெயகாந்தனின் இறுதி நிகழ்ச்சிக்குப் பிரபலங்கள் மட்டும் வரவில்லை. யாரென்றே தெரியாத பலரும் வந்து ஒரு ஓரமாய் நின்று அஞ்சலி செலுத்திச் சென்றார்கள். ஒரு தந்தையும் ஓர் இளம் பெண்ணும் அதுபோல ரொம்ப நேரம் நின்றிருந்தார்கள். அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக் கொண்டேயிருந்தது. ஜெயகாந்தனின் உறவினர்களில் ஒருவர் அருகே சென்று, ‘நீங்க...’ என்று இழுத்தார். அவர் ‘இது எம் பொண்ணு. அவரோட கதைகள் எல்லாத்தையும் படிச்சிருக்கா... பாக்கணும்னு சொன்னா...’ என்று மெல்லிய குரலில் சொன்னார். அந்தப் பெண் ஜெயகாந்தனின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் எழுதாமல் நிறுத்திய பிறகுதான் அந்தப் பெண் பிறந்திருக்க வேண்டும்.
மஜீத் காரைக்குடி
பெரும்சொத்தின் வழக்குதனை
பவானிசிங் கவ்வும்!
பட் ஒன் திங்...
மீண்டும் ஆச்சாரியா வெல்லும்!
அ.ப. இராசா
போதி மரம் எதற்கு
சென்னை டிராபிக் போதும்
சித்தார்த்தா!
உமா மகேஸ்வரன் லாவோ ட்சு
அந்த ஜெயா டிவி நிருபருக்கு ஒரு ‘சகாப்தம்’ சிடி பார்சேல்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT