Published : 02 Apr 2015 05:42 PM
Last Updated : 02 Apr 2015 05:42 PM

ஏர்போர்ட் நுழையவே இன்ஸ்யூரன்ஸ் எடுக்கணுமா?- சின்னப்பன்

செய்தி:>39-வது முறையாக விபத்து: கண்ணாடி கதவு உடைந்து விழுந்து சென்னை விமான நிலைய ஊழியர் காயம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சின்னப்பன் கருத்து:

விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்படும்போதும் அதிர்வு ஏற்படுவது கட்டிடத்தை வடிவமைத்தவர்களுக்குத் தெரியாதா என்ன? எவ்வளவு அதிர்வு வரும் என்றுகூடத் தெரியாதவர்கள் கட்டிடத்தை வடிவமைத்தால் இப்படித்தான் இருக்கும்.

இப்போதாவது அழகுக்காக இருக்கும் கண்ணாடிகளை உடனே மாற்றி தேவையான இடங்களில் மட்டும் கண்ணாடிகளை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் விமான நிலையத்துக்குள் வருவதற்கு தனியாக இன்ஸ்யூரன்ஸ் ஏதாவது எடுத்துக்கொண்டு தான் வரவேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x