Published : 01 Apr 2015 02:52 PM
Last Updated : 01 Apr 2015 02:52 PM

அரசியல் நாகரிகம் கிலோ எவ்வளவு? - கமல்

தலையங்கம்:>அதிமுக, திமுக... உங்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கமல் கருத்து:

அரசியல் நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது மடமை.

வாழ்நாள் முதல்வர் என்று சொல்லும் தொண்டன் உள்ளவரை, ஜனநாயகம் என்றால் என்ன என்பதை தமிழன் புரிந்துகொள்ளும் வரை, இலவசமாக கிடைப்பதெல்லாம் நமது வரிப் பணத்திலிருந்து கிடைக்கிறது என்று நாம் புரிந்துகொள்ளும்வரை, அரசு ஊழியர்கள் நமது எஜமான்கள் அல்ல, நாம்தான் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கிறோம் என்று தெளிவு பெறாத வரை அரசியவாதிகள் திருந்தப்போவதில்லை.

அதென்ன எல்லா திட்டத்திலும் தலைவர்கள் பெயரை போடுவது, அவர்களின் சொந்த சம்பாத்தியத்தில் கொடுக்கிறார்களா? இந்த தனி மனித வழிபாடு நின்றாலே அவர்கள் திருந்தவும், மாற்று கட்சிகளை மதிக்கவும் கூடும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை செலவிட்டு ஓர் அரசு செயல்படுத்தும் திட்டத்தை, ஆட்சி மாறும்போது அடுத்து வரும் அரசு அதை கிடப்பில் போட்டு அநியாயமாக மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை திராவிட கட்சிகளும், அதன் தலைவர்களும், கூன்வளைந்து கும்பிடும் மந்திரிகளும் அதன் தொண்டர்களும் என்றுதான் புரிந்துகொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x