Published : 12 Mar 2015 01:01 PM
Last Updated : 12 Mar 2015 01:01 PM
'தி இந்து' ஆன்லைன் வாசகர் துரைராஜ் கருத்து: நிலம் கையகப்படுத்தும் இந்தத் திட்டம் மிகவும் அவசியமான ஒரு சட்டமா?
மோடி ஆட்சிக்கு வந்த பின்பு அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் ஏதாவது கொண்டுவரப்பட்டுளதா?
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனில்லாத இந்தத் திட்டத்தை சட்டமாக்குவதில் பிஜேபி அரசு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?
அதிலும் நம்ம ஊர் அதிமுக, பிஜேபி நடத்தும் நாடகங்கள் கொஞ்சமல்ல.
முந்தைய மத்திய காங்கிரஸ் அரசால்தான் தமிழகத்துக்கு எங்களால் நல்ல திட்டங்களை கொண்டுவரமுடியவில்லை என்று நொண்டி சாக்கு சொன்ன அதிமுக, தமிழகம் வந்த பிஜேபி தலைவர் அமித் ஷா அதிமுகவை 'ஊழல் கட்சி' என்று சொன்ன பிறகும், அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு இந்தச் சட்டத்தில் அவர்களுக்கு அதரவு கரம் நீட்டியிருப்பத்தின் அர்த்தம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஊழல் கட்சி என்று அவர்களை வர்ணனை செய்த நாட்டுப்பற்று மிக்க பிஜேபியும், அதிமுகவின் ஆதரவை ஏற்றுக்கொண்டதின் மூலம் அவர்களின் தேசப்பற்றும் புல்லரிக்க வைக்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT