Published : 30 Mar 2015 07:36 PM
Last Updated : 30 Mar 2015 07:36 PM
>புத்தகக் குறிப்புகள்: கலாம் முப்பாட்டனாருக்கு கோயிலில் கிடைத்த முதல் மரியாதை!
'தி இந்து' ஆன்லைன் வாசகர் செ கருத்து:
திருநெல்வேலிக்கும் பேட்டைக்கும் நடுவிலுள்ள சாலையில் பேட்டையை அடுத்த குளக்கரையின் கீழோரத்துத் திருப்பம் தாண்டி வடதிசை நோக்கி சாலை திரும்பியதும் அங்கே சாகுல் ஹமீதி மசார் என்று ஒரு தொழுகைத் தளம் உண்டு.
நாள் முழுதும் அணையாது எரியும் உயரமான குத்துவிளக்கு, ஒரு வட்டமான தட்டில் திருநீறு, குங்குமம் உண்டு. மதபேதமே இல்லாது அனைவரும், அந்த மசார் உண்டியலில் காணிக்கையும், திருநீறும், குங்குமமும் எடுத்தணைத்துச் செல்கிறார்கள்.
அங்கு கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய தாய்மார்களுடன் வந்து நலமான மகபெருக்கு வணங்கிச் செல்வது கண்கூடு.
இந்துக்கள் பிரார்த்தனை செய்தவாறு தென்படும் அந்த மசாருக்குள் இருக்கிறது சமதர்மம்.
வாருங்கள், வந்து காணுங்கள். ஏகன், அநேகன் என்ற மாணிக்கவாசகரின் இறை தரிசனத்தை இங்கே காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT