Published : 30 Mar 2015 07:12 PM
Last Updated : 30 Mar 2015 07:12 PM
செய்தி:>பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சமாளிக்கலாமா?- 'திட்டத்துடன்' வரும் பயணிகளுக்கு அபராதம் நிச்சயம்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ராஜன் கிட்டப்பா கருத்து:
ரயிலில் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணிக்கும் செலவைவிட பிளாட்பாரம் டிக்கெட் விலை அதிகம் என்கிற அபத்தமான முரண்பாட்டை நியாயப்படுத்த அதிகாரிகள் முனைகின்றனர்.
அடித்தட்டு மக்களில் ஒரு பிரிவினர், தற்காலிக பயணமாக பெருநகரங்களுக்கு வந்து செல்வோர், அறை எடுத்து தங்க வசதியில்லாமல் நேர்முக தேர்வுகளுக்கு வந்து செல்வோர் என பலரும் ரயில்வே கழிப்பிடங்களை உபயோகிக்கின்றனர் எனில், மக்களின் அடிப்படை வசதிகளை அரசாங்கம் புறக்கணித்துள்ளது என்பதே இங்கு கவனிக்க வேண்டும்.
அதை சீர் செய்ய முயலாமல் பயணிகளுக்கு துணையாக வருபவர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? உண்மையிலேயே மேலே கூறிய செயலில் ஈடுபடுபவர்களை தடுக்க எளிமையான வழிகள் இருக்கும்போது கட்டணத்தை உயர்த்துவது அநியாயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT