Published : 31 Mar 2015 02:38 PM
Last Updated : 31 Mar 2015 02:38 PM

அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனத்துக்கு... - மோகன்

செய்திக் கட்டுரை:>தமிழக இலவசத் திட்டங்களும் நிதி ஆதார விளைவுகளும்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மோகன் கருத்து:

வேலை இல்லாதவனுக்கு வேலை கொடுங்கள்... இலவசம் அல்ல. அவன் சம்பாதித்து தன் மக்களுக்கும் மனைவிக்கும் பெருமையாக வாங்கிக் கொடுப்பான். தலை நிமிர்ந்து நடப்பான். இப்போது தந்தை சொல்வதை மகன் கேட்பதில்லை. கேட்டால், சொல்கிறான்... "அரசுதான் எனக்கு எல்லாம் தருகிறது. நீயா தருகிறாய்?" என்று.

குடும்ப அமைதியின் ஆணி வேரையே இந்த இலவசங்கள் அறுக்கின்றன. "பசித்தவனுக்கு மீனைக் கொடுக்க வேண்டாம். மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள்"- இந்த பழமொழியை சொல்லி சொல்லி அலுத்துவிட்டது. இலவசங்கள் வெறும் ஓட்டுகாகதான் கொடுக்கப்படுகின்றன.

மதிய உணவு மட்டும் கொடுங்கள், போதும். விவசாயத்தை ஊக்குவியுங்கள், விவசாயம் சார்ந்த தொழில்களை உண்டாக்குங்கள். இன்ஜினியரிங் என்றால் அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங்கை ஊக்குவியுங்கள்.

ஏரி, வாய்க்கால், கால்வாய், குளம் - இவற்றை புதிதாக வெட்டுங்கள், இருப்பவைகளை தூர் வாருங்கள். அணை கட்டுங்கள். தான் இருக்கும் கிராமத்திலேயே 100, 200 ரூபாய்க்கு தினமும் வேலை கிடைத்தால் அவன் பட்டணம் நோக்கி படை எடுக்க மாட்டான். விவசாயம் சார்ந்த தொழில்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.

அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளில் இவை விழுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x