Published : 06 Mar 2015 12:49 PM
Last Updated : 06 Mar 2015 12:49 PM
செய்திக் கட்டுரை:>இந்தியர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா முகேஷ் சிங் பேட்டி?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் நாகராஜன் கருத்து: 'மாதொருபாகன்' புத்தகத்தில் ஒரு சில பக்கங்களை வைத்துகொண்டு சண்டையிட்ட ஒரு குழுவுக்கும், ஒரு மணி நேர ஆவணப்படத்தில் கைதி முகேஷ் பேசியதை வைத்துகொண்டு, அதை எதிர்க்கும் எனதருமை இந்திய மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
இந்த ஆவணப்படத்தில் முகேஷ் செய்தது சரி என்று அவரையும், கைதிகளின் வழக்கறிஞரும், அவர் குடும்பத்தையும் தவிர வேறு யாரும் நடந்த சம்பவத்துக்கு நியாயம் பாராட்டுவதாக தெரியவில்லை.
குறிப்பாக, முகேஷ் கூறியதைவிட அந்த வழக்கறிஞர் கூறியதை வைத்து எந்த ஒரு வாத - விவாதங்கள் நடைபெறவில்லை என்பது விந்தை. சட்டம் பேச வேண்டியவர், கலாச்சார போர்வையில் ஒளிந்து கொள்கிறார்.
என்னை பொருத்தவரை முகேஷ் கூறியிருப்பது ஒன்றும் புதிது அல்ல, இந்தியாவில் பல அடிப்படைவாதிகளும், சில அரசியல்வாதிகளும், பல வணிகநோக்கு சினிமா படங்களில் வரும் நாயகர்களின் வசனம்தான் கைதி முகேஷ் கூறியிருப்பது.
நடந்த சம்பவம் ஒரு காட்டுமிராண்டித்தனம். அவை இன்றும் இந்தியாவில் தொடர்கிறது என்பது நிதர்சன உண்மை. பெண்களை போற்றவும் வேண்டாம்... தூற்றவும் வேண்டாம். பெண்களுக்கும் சுயசிந்தனை, சுயமரியாதை உண்டென்று வாழ்ந்தால் நாடு சிறக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT