Published : 20 Mar 2015 03:34 PM
Last Updated : 20 Mar 2015 03:34 PM

ஓஎம்ஆரில் பங்களாவா வாங்கப்போகிறார்?- டி.வீ.

செய்தி:>அரசுப் பேருந்துகளில் தீர்வில்லாமல் தொடரும் சில்லறைப் பிரச்சினை: பரஸ்பரம் குற்றம்சாட்டும் பயணிகள் - நடத்துநர்கள்

'தி இந்து' வாசகர் டி.வீ. கருத்து:

பயணிகளான நாம் சில்லறைகளை சரியாக வைத்துக்கொண்டு பயணிக்க பழக வேண்டும். கோயிலுக்கோ சர்ச்சுக்கோ மசூதிக்கோ செல்லும்போது சில்லறைகளை வாரி வழங்கும் நாம், பேருந்தில் ஏறும்போது மட்டும் குறைந்தபட்சம் 100 ரூபாய் நோட்டை நீட்டி பந்தா பண்ணினால் பாவம் நடத்துனர் எங்கே போவார்?

அயனாவரம் - திருவான்மியூர் தடத்தில் குறைந்தபட்சம் நெரிசலான நேரத்தில் 400 பேராவது ஏறி இறங்குவார்கள். இதில் 200 பேராவது சில்லறை வைத்துக் கொள்வதை சில்லறைத்தனமாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நாம் கொடுக்கும் சில்லறையிலிருந்துதான் மீதியை சில்லறைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர் சில்லறையை வைத்துக் கொண்டு வேலையை முடித்துக் கொண்டு ஓ.எம்.ஆர். சாலையில் பங்களாவா வாங்கப்போகிறார்?

டியூட்டி முடித்து கணக்குப் பார்ப்பதற்கு சில்லறைகள் இருந்தால் சிரமம். மேலும் பயணிகள் வாங்க மறந்த சில்லறைகளையும் சேர்த்தே கணக்கு கொடுக்க வேண்டும். பாமரன் போன்றவர்கள் இதையெல்லாம் தெரிந்தா வைத்திருக்கப் போகிறார்கள்.

நாம் நடத்துனர் ஒருவருடன்தான் டீல் செய்கிறோம். ஆனால் நடத்துனர்கள் 1,000 பேரை சமாதானமாகக் கொண்டு சேர்க்க வேண்டும். சில்லறைத்தனமாக இல்லாமல் சரியான சில்லறை கொடுத்துப் பயணிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x