Published : 03 Mar 2015 06:14 PM
Last Updated : 03 Mar 2015 06:14 PM
>ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள் கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. தங்கள் சுய விமர்சனத்தோடு வெளிப்படையாக கருத்துக்களை வைத்தது எதார்த்தமான உண்மை.
25 ஆண்டுகளுக்கு முன்பு எனது இரண்டு குழந்தைகளையும் தமிழ் வழி கல்வி மூலம் கல்வி பயில அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்க்கும்பொழுது சக நட்பு, உறவுகள் என்னை விநோதமாக பார்த்தார்கள்.
மேல்நிலை கல்வி வரை தமிழ் வழி கல்வி பயின்றவர்கள், கல்லூரிக்கு சென்ற பின்புதான் ஆங்கில வழி கல்வி பயின்றார்கள்.
இன்று எனது மகள் இயற்பியல் முதுகலை, எனது மகன் இரண்டு முதுகலை பட்டமும், இயற்பியல் - புவியியல் (இணைவு) அறிஞர் பட்டமும் பெற்றுள்ளனர்.
இதற்கு முழு காரணம் (பெற்றோர்கள்), நாங்கள் எங்கள் குழந்தைகளிடம் பேசிய தாய்மொழி தமிழ், அவர்கள் மேல்நிலை கல்வி வரை கற்றல் மொழி தமிழ், அதனாலதான் அவர்கள் புரிந்து மேற்படிப்பு படித்து சாதிக்க முடிந்தது.
தமிழ் மேல் கொண்ட பற்றால் இதனை சொல்லவில்லை. தாய்மொழி வாழ்க்கையின் அடையாளம் என்பதால் இக்கருத்தை பகிர்கின்றேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT