Published : 06 Mar 2015 08:33 PM
Last Updated : 06 Mar 2015 08:33 PM

தொழிலதிபர்கள் இதை செய்வார்களா?- ராயப்பன்

செய்தி:>நான் விவசாயிகளின் எதிரி அல்ல: பிரதமர் நரேந்திர மோடி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கருத்து: எல்.கே.ஜி.-க்கு ஐம்பதாயிரம் ஃபீஸ் வாங்குகிறவர்களும், சின்ன உடல்நல குறைவுக்கு ஹாஸ்பிடல் வருபவர்களிடம்கூட இருபதாயிரம், முப்பதாயிரம் பில் போட்டு பிடுங்குபவர்களுக்கும், கரன்ட் தயாரிச்சு இரண்டு மடங்குக்கு அரசாங்கத்திடம் விற்பவர்களும் சமூக சேவைதான் செய்கிறார்கள்.

அதனால், சட்டம் போட்டு ஏழை விவசாயிடம் உள்ள மொத்த நிலத்தையும் பிடுங்கி, பரம ஏழையான கல்வி வியாபாரியிடமும், மருத்துவ சேவை செய்யும் ஹாஸ்பிடலுக்கும், கோடி கோடியாய் சம்பாதிக்கும் தொழிலதிபர்களிடமும் கொடுத்துவிடுங்கள்.

இப்படி அரசிடம் சலுகை விலையில் நிலம் பெரும் தொழிலதிபர்கள் சாதாரண கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வசூலிக்க வேண்டும். அது பள்ளி, கல்லூரி கட்டணமானாலும் சரி, மருத்துவ கட்டணமானாலும் சரி, கரன்ட் கட்டணமானாலும் சரி என்று அரசு கட்டுப்பாடு விதிக்க தயாரா? எவரோ கோடியில் கொள்ளையடிக்க ஏழை வயிற்றில் அடிப்பதேன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x