Published : 19 Mar 2015 02:34 PM
Last Updated : 19 Mar 2015 02:34 PM

இது நியாயமா கேஜ்ரிவால்?- ஷண்முகம்

>ஆம் ஆத்மி: ஒரு கனவின் சிதைவு என்ற கட்டுரையையொட்டி பதிவுக்கு 'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஷண்முகம் பகிர்ந்த கருத்து:

நான் பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னவர். பதவிக்காக அடுத்த இயக்கத்தை உடைக்கவும் தயங்கவில்லை.

நேர்மையானவர் என்று தன்னைதானே சொன்னவர் தவறான முறையில் பணம் பெற்றதாக அவர்களுக்குளே எதிர்ப்பு கிளம்பியிருந்து அதைச் சொன்னவர் குற்றவாளி என்கிற அளவுக்கு சென்றுவிட்டார்.

மேலும், என்னை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள்... எல்லாத்தையும் விசாரணை செய்யச் சொல்லுங்கள் என்கிறார். இது நியாயமா?

நாலு பேர் திருடியற்காக நாமும் திருடிவிட்டு முன்னால் திருடியவரை பிடிக்கட்டும் அதன்பின் என்னைப் பிடியுங்கள் என்பது நியாயமா?

இந்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்த பலரும் வெளியேறிவிட்டார்கள். இப்போது அவருடன் இருப்பதோ இடையில் வந்த குள்ளநரிகள்தான். என்னவோ நாமும் நம்பினோம். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யார் என்று தெரியுமா நமக்கு.

அவரை டெல்லியில் வளர்த்தவர் எல்லாரையும் வேண்டாம் என்பதில் இருந்து ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நேர்காணலில் நான் ஒரு காந்தனி, அதாவது பரம்பரை வியாபாரி குடும்பத்தவன், எப்படி வரி வாங்க முடியும் என்று எனக்கு நல்லா தெரியும் என்றார்.

வரி மட்டுமல்ல... நாட்டைக்கூடத்தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x