Published : 08 Aug 2017 11:29 AM
Last Updated : 08 Aug 2017 11:29 AM
ஒரு வாழ்த்துடனே தொடங்குவோம். அறிவித்தபடியே, குறிப்பிட்ட நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2ஏ தேர்வு நடந்து முடிந்து இருக்கிறது. ஏழரை லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஐந்தரை லட்சம் பேர் எழுதி உள்ளனர்.
பல லட்சம் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தல்; பல நூறு தேர்வு மையங் களைத் தேர்ந்தெடுத்தல், தேவையான எண்ணிக்கையில் தேர்வுக் கண்காணிப் பாளர்களை நியமித்தல், அத்தனை பேருக்கும் நுழைவுச் சீட்டு சென்று சேர்வதை உறுதி செய்தல், வினாத்தாள், விடைத்தாள்களை அச்சடித்து விநியோ கித்தல், விடைகளை மதிப்பிடுதல், தேர்வு முடிவுகள் வெளியிட்டு, பணி நியமன ஆணைகள் வழங்குதல்... அப்பாடா! உண்மையிலேயே சவாலான பணிதான். ஆனாலும், டிஎன்பிஎஸ்சி சற்றும் சுணங்காமல், சுத்தமாகச் செய்து வருகிறது. ஆணையத்தின் நிர்வாகத் திறனை மனம் திறந்து பாராட்டுவோம். அதேசமயம், யு.பி.எஸ்.சி.க்கு இணை யாக வளர்ந்து நிற்கும் டிஎன்பிஎஸ்சி, தான் நடத்தும் தேர்வுகளின் தரம் மீதும், சற்றே கூடுதல் கவனம் செலுத்தலாமோ என்று எண்ண வைத்துள்ளது தற்போதைய குரூப் 2ஏ தேர்வு. பொதுத் தமிழ் பகுதியில் உள்ள சில கேள்விகள், நம்மை நகைக்க வைக்கின் றன. வினா எண் 5. ‘பொருத்துக'. சரியானதைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும். என்ன தரப்பட்டு இருக்கிறது....? இடப்புறம் - காகம், குதிரை, சிங்கம், குயில். வலப்புறம் - கூவும், கரையும், கனைக்கும், முழங்கும். இதற்கு அடுத்த வினா. ‘மூலன்' என்னும் இயற்பெயர் உடையவர் யார்...? இதற்குக் கீழே தரப்பட்டுள்ள நான்கு தேர்வுகள் (options): திரு‘மூலர்', அப்பர், சாத்தனார், தாயுமானவர். கிராமத்துப் பெரியவர்கள் பள்ளிச் சிறு வர்களைக் கேட்பதுண்டு. (அது ஒருகாலம்!) 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்...?' 'பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர்...?' பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்விலுமா இப்படி....? 57-ம் கேள்வி. மீண்டும், பொருத்துக. ஒருபுறம், ச்ரங்கம், அங்கயற்கண்ணி என்று பெயர்கள்; மறுபுறம், திருவரங்கம், மீனாட்சி. அதிலும், ‘அங்கயற்கண்ணி' - ‘மீனாட்சி'; வேறு பெண் பெயரேயில்லை. இதுவெல்லாம் கூடப் பரவாயில்லை. கேள்வி எண் 95. ‘குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது' - கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன், குளோரோஃப்ளூரோ கார்பன், மீத்தேன். இது எப்படி மொழித்தாளில் இடம் பெற்றது....? விடுங்கள். இதற்கு இரண்டு இடங்கள் தள்ளி, கேள்வி எண் 98-க்குப் போனால்...... அசத்துகிறது வினாத்தாள். அப்படி என்ன கேள்வி....? ‘Refrigerator' - என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க! குளிர்பதனப் பெட்டி, குளிரூட்டும் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, குளிர் காக்கும் பெட்டி. (‘லிப்கோ' அகராதி, பதனப் பெட்டி என்கிறது. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, குளிர்சாதனப் பெட்டி, பதனப் பெட்டி இரண்டும் ஒன்றே என்கிறது. வினாத் தாளிலேயே, ‘பதனப் பெட்டி' ‘ ஏர்-கண்டிஷனர்’ சாதனத்துக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தக் குழப்பம் தேவைதானா....?) ஒரே ஒரு கேள்வி கேலிக்குரியதாக இருந்தாலும், மொத்தத் தேர்வுமே கேள்விக்குரியதாகி விடும். அரசின் முக்கிய பணிகளுக்கான தேர்வில், இந்த அளவுக்கு தரச் சிதைவு, கூடவே கூடாது. அது மட்டுமல்ல; தமிழகப் பட்டதாரி இளைஞர்களின் அறிவுத் திறனை மிகக் குறைத்து மதிப்பிட்டு, ஏளனம் செய்ய இடம் தருகின்றன இவ்வகைக் கேள்விகள். புத்திசாலித்தனமான ஒரு கேள்வியும் இருக்கிறது. கேள்வி எண் 9. ‘இறை, செப்பு’ என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள் - வினா, மொழி, விடை, இறைவன். மேலே ‘இறை' என்கிற சொல் இருப்பதனால், கண்ணை மூடிக் கொண்டு, ‘இறைவன்' என்று பதில் தருகிறவர்கள் இருக்கவே செய்வார்கள். கூடவே, ‘செப்பு' என்பதும் இருப்பதை எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள்...? அது மட்டுமல்ல; ‘மொழி' என்பதை பெயர்ச் சொல்லாக மட்டும் அறிந்து வைத்து இருப்பவர்களே ஏராளம். வினைச்சொல்லும் அதுவே என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆஹா.... அற்புதம். ஆனால் இத்தகைய வினாக்கள் மிகச் சிலவே உள்ளன. மாறாக, பட்டப் பெயர்கள், விருதுகள், மிகப் பிரபலமான திரைப்படப் பாடல் மீதான கேள்விகள், மன்னிக்கவும், தாளின் தரத்தை, வெகுவாக தரம் தாழ்த்தி விட்டன. பொது அறிவுப் பகுதியும் இப்படியே. மணிப்பூர் தேர்தலில் இரோம் ஷர்மிளா பெற்ற வாக்குகள் எத்தனை? என்று ஒரு கேள்வி. அதற்கான தேர்வுகள் - 10, 30, 60, 90. இது சரிதானா என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம். இங்கேயும் சில புத்திசாலித்தனமான கேள்விகள் ஆங்காங்கே தென்படுகின்றன. போட்டிச் சட்டம் 2002 - எந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது...? (கேள்வி எண் 103) 2002, 2009, 2013, 2016. பலபேர் 2002 என்று தேர்ந்தெடுக்க சாத்தியம் உண்டு. சரியான விடை - 2009. சட்டம் வடிவமைக்கப் பட்டது - 2002; அமலுக்கு வந்தது - 2009. வரவேற்கப்பட வேண்டிய வினா. கணக்குப் பகுதிதான் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது. கணிதத்தை முக்கிய பாடமாகக் கொண்டவர்கள் அல்லது, கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டுமே விடையளிக்க முடியும் என்கிற விதத்தில்தான் இப்பகுதியில் அனேகமாக எல்லா வினாக்களுமே உள்ளன. எந்தப் பட்டதாரியும் எழுதலாம் என்கிற தேர்வு, ஒரு சாராருக்கு மட்டுமே உதவுகிறாற் போல இருக்கவே கூடாது.
- இது மாதிரியான தேர்வுகளில் வினாக் களைத் தேர்வு செய்வதில் இன்னமும் நாம் பல்லாண்டுகள் பின் தங்கி இருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறது. ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வினாக்கள், இலக்கணப் பிழையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதுவும் நம்மை மிகவும் கவலைப் பட வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான, முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிற டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ தேர்வில், பல படிகள் சறுக்கி இருப்பதாகவே தோன்றுகிறது. இன்றைய இளைஞர்களின் நவீன அறிவுத் திறனை, நமது ஆகச் சிறந்த தொன்மங்களுடன் இணைக்கிற பால மாகச் செயல்படுகிற வல்லமை கொண் டவை போட்டித் தேர்வுகள். பொறுப்பில் உள்ளவர்கள், இதனை மனதில் கொண்டு வினாத்தாள்களை அமைத்தால், நமக்கு நல்ல ஊழியர்கள், அலுவலர்கள் கிடைப்பார்கள். நல்ல குடிமகன்களும்தான். நாற்காலிக்கு எத்தனை கால்....? டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு ஒரு வாழ்த்துடனே தொடங்குவோம். அறிவித்தபடியே, குறிப்பிட்ட நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2ஏ தேர்வு நடந்து முடிந்து இருக்கிறது. ஏழரை லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஐந்தரை லட்சம் பேர் எழுதி உள்ளனர். பல லட்சம் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தல்; பல நூறு தேர்வு மையங் களைத் தேர்ந்தெடுத்தல், தேவையான எண்ணிக்கையில் தேர்வுக் கண்காணிப் பாளர்களை நியமித்தல், அத்தனை பேருக்கும் நுழைவுச் சீட்டு சென்று சேர்வதை உறுதி செய்தல், வினாத்தாள், விடைத்தாள்களை அச்சடித்து விநியோ கித்தல், விடைகளை மதிப்பிடுதல், தேர்வு முடிவுகள் வெளியிட்டு, பணி நியமன ஆணைகள் வழங்குதல்... அப்பாடா! உண்மையிலேயே சவாலான பணிதான். ஆனாலும், டிஎன்பிஎஸ்சி சற்றும் சுணங்காமல், சுத்தமாகச் செய்து வருகிறது. ஆணையத்தின் நிர்வாகத் திறனை மனம் திறந்து பாராட்டுவோம். அதேசமயம், யு.பி.எஸ்.சி.க்கு இணை யாக வளர்ந்து நிற்கும் டிஎன்பிஎஸ்சி, தான் நடத்தும் தேர்வுகளின் தரம் மீதும், சற்றே கூடுதல் கவனம் செலுத்தலாமோ என்று எண்ண வைத்துள்ளது தற்போதைய குரூப் 2ஏ தேர்வு. பொதுத் தமிழ் பகுதியில் உள்ள சில கேள்விகள், நம்மை நகைக்க வைக்கின் றன. வினா எண் 5. ‘பொருத்துக'. சரியானதைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும். என்ன தரப்பட்டு இருக்கிறது....? இடப்புறம் - காகம், குதிரை, சிங்கம், குயில். வலப்புறம் - கூவும், கரையும், கனைக்கும், முழங்கும். இதற்கு அடுத்த வினா. ‘மூலன்' என்னும் இயற்பெயர் உடையவர் யார்...? இதற்குக் கீழே தரப்பட்டுள்ள நான்கு தேர்வுகள் (options): திரு‘மூலர்', அப்பர், சாத்தனார், தாயுமானவர். கிராமத்துப் பெரியவர்கள் பள்ளிச் சிறு வர்களைக் கேட்பதுண்டு. (அது ஒருகாலம்!) 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்...?' 'பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர்...?' பட்டதாரிகளுக்கான போட்டித் தேர்விலுமா இப்படி....? 57-ம் கேள்வி. மீண்டும், பொருத்துக. ஒருபுறம், ரங்கம், அங்கயற்கண்ணி என்று பெயர்கள்; மறுபுறம், திருவரங்கம், மீனாட்சி. அதிலும், ‘அங்கயற்கண்ணி' - ‘மீனாட்சி'; வேறு பெண் பெயரேயில்லை. இதுவெல்லாம் கூடப் பரவாயில்லை. கேள்வி எண் 95. ‘குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது' - கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன், குளோரோஃப்ளூரோ கார்பன், மீத்தேன். இது எப்படி மொழித்தாளில் இடம் பெற்றது....? விடுங்கள். இதற்கு இரண்டு இடங்கள் தள்ளி, கேள்வி எண் 98-க்குப் போனால்...... அசத்துகிறது வினாத்தாள். அப்படி என்ன கேள்வி....? ‘Refrigerator' - என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க! குளிர்பதனப் பெட்டி, குளிரூட்டும் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, குளிர் காக்கும் பெட்டி. (‘லிப்கோ' அகராதி, பதனப் பெட்டி என்கிறது. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, குளிர்சாதனப் பெட்டி, பதனப் பெட்டி இரண்டும் ஒன்றே என்கிறது. வினாத் தாளிலேயே, ‘பதனப் பெட்டி' ‘ ஏர்-கண்டிஷனர்’ சாதனத்துக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தக் குழப்பம் தேவைதானா....?) ஒரே ஒரு கேள்வி கேலிக்குரியதாக இருந்தாலும், மொத்தத் தேர்வுமே கேள்விக்குரியதாகி விடும். அரசின் முக்கிய பணிகளுக்கான தேர்வில், இந்த அளவுக்கு தரச் சிதைவு, கூடவே கூடாது. அது மட்டுமல்ல; தமிழகப் பட்டதாரி இளைஞர்களின் அறிவுத் திறனை மிகக் குறைத்து மதிப்பிட்டு, ஏளனம் செய்ய இடம் தருகின்றன இவ்வகைக் கேள்விகள். புத்திசாலித்தனமான ஒரு கேள்வியும் இருக்கிறது. கேள்வி எண் 9. ‘இறை, செப்பு’ என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள் - வினா, மொழி, விடை, இறைவன். மேலே ‘இறை' என்கிற சொல் இருப்பதனால், கண்ணை மூடிக் கொண்டு, ‘இறைவன்' என்று பதில் தருகிறவர்கள் இருக்கவே செய்வார்கள். கூடவே, ‘செப்பு' என்பதும் இருப்பதை எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள்...? அது மட்டுமல்ல; ‘மொழி' என்பதை பெயர்ச் சொல்லாக மட்டும் அறிந்து வைத்து இருப்பவர்களே ஏராளம். வினைச்சொல்லும் அதுவே என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்க முடியும். ஆஹா.... அற்புதம். ஆனால் இத்தகைய வினாக்கள் மிகச் சிலவே உள்ளன. மாறாக, பட்டப் பெயர்கள், விருதுகள், மிகப் பிரபலமான திரைப்படப் பாடல் மீதான கேள்விகள், மன்னிக்கவும், தாளின் தரத்தை, வெகுவாக தரம் தாழ்த்தி விட்டன. பொது அறிவுப் பகுதியும் இப்படியே. மணிப்பூர் தேர்தலில் இரோம் ஷர்மிளா பெற்ற வாக்குகள் எத்தனை? என்று ஒரு கேள்வி. அதற்கான தேர்வுகள் - 10, 30, 60, 90. இது சரிதானா என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம். இங்கேயும் சில புத்திசாலித்தனமான கேள்விகள் ஆங்காங்கே தென்படுகின்றன. போட்டிச் சட்டம் 2002 - எந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது...? (கேள்வி எண் 103) 2002, 2009, 2013, 2016. பலபேர் 2002 என்று தேர்ந்தெடுக்க சாத்தியம் உண்டு. சரியான விடை - 2009. சட்டம் வடிவமைக்கப் பட்டது - 2002; அமலுக்கு வந்தது - 2009. வரவேற்கப்பட வேண்டிய வினா. கணக்குப் பகுதிதான் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது. கணிதத்தை முக்கிய பாடமாகக் கொண்டவர்கள் அல்லது, கணிதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்கள் மட்டுமே விடையளிக்க முடியும் என்கிற விதத்தில்தான் இப்பகுதியில் அனேகமாக எல்லா வினாக்களுமே உள்ளன. எந்தப் பட்டதாரியும் எழுதலாம் என்கிற தேர்வு, ஒரு சாராருக்கு மட்டுமே உதவுகிறாற் போல இருக்கவே கூடாது. - இது மாதிரியான தேர்வுகளில் வினாக் களைத் தேர்வு செய்வதில் இன்னமும் நாம் பல்லாண்டுகள் பின் தங்கி இருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறது. ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வினாக்கள், இலக்கணப் பிழையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதுவும் நம்மை மிகவும் கவலைப் பட வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான, முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிற டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ தேர்வில், பல படிகள் சறுக்கி இருப்பதாகவே தோன்றுகிறது. இன்றைய இளைஞர்களின் நவீன அறிவுத் திறனை, நமது ஆகச் சிறந்த தொன்மங்களுடன் இணைக்கிற பால மாகச் செயல்படுகிற வல்லமை கொண் டவை போட்டித் தேர்வுகள். பொறுப்பில் உள்ளவர்கள், இதனை மனதில் கொண்டு வினாத்தாள்களை அமைத்தால், நமக்கு நல்ல ஊழியர்கள், அலுவலர்கள் கிடைப்பார்கள். நல்ல குடிமகன்களும்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT