Published : 13 Jul 2017 11:10 AM
Last Updated : 13 Jul 2017 11:10 AM
டானியும் நண்பர்களும்’ - பெருகிவரும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளின் நல்வாழ்வுக்கான அமைப்பு. திருச்சியில் செயல்படும் இந்த அமைப்பைப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், இதற்கு ஏன் ‘டானியும் நண்பர்களும்’ என்று பெயர் வைத்தார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
திருச்சி ரஞ்சனி - ஞானையா தம்பதியின் இரண்டாவது மகன் டேனியல் என்ற டானி. 1982-ல் பிறந்த டானிக்கு, 4 வயதிலேயே தசைச் சிதைவு நோய் (Muscular Dystrophy) இருப்பது அறியப்பட்டது. துடித்துப் போன ரஞ்சனியும் ஞானையாவும் தங்களது செல்லத்தை உயர்தர மருத்துவச் சிகிச்சை கொடுத்தாலாவது குணப்படுத்த முடியுமா என்ற அவாவில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
இப்படித்தான் உதயமானது
அமெரிக்காவில், சிகிச்சை எடுத்துக் கொண்டே படிப்பைத் தொடர்ந்த டானிக்கு 8 வயதில் நோயின் தாக்கம் அதிகமாகி முற்றாக முடங்கிப்போனார். சிகிச்சைகள் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில், பத்து ஆண்டுகள் சக்கர நாற்காலியிலேயே நாட்களை நகர்த்தியவர், 2000-ல் இயற்கையின் பிள்ளையானார்.
இடையில், அமெரிக்கா சென்ற பிறகும் பாட்டியைக் காண அவ்வப்போது தமிழகம் வந்துபோன டானி, இங்கே தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்டு துடித்தார்; துவண்டார். ‘தசைச் சிதைவால் பாதிக் கப்பட்ட அனைவரும் எனது நண்பர்கள். வாழும்வரை அவர்கள் சிரமமின்றி வாழவேண்டும். அவர்களுக்காக ஒரு சேவை மையத்தைத் தொடங்க வேண்டும்.’ என்று தனது பெற்றோரிடம் சொன்னார் டானி.
அவர்களும் மறுப்பேதும் சொல்லா மல் சம்மதிக்க, 1992-ல் ‘டானியும் நண்பர் களும்’ சேவை மையம் திருச்சியில் உதய மானது. டானி தனது சேமிப்பில் வழங் கிய தொகையுடன் அவரது பெற்றோரும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிச் சேவையைத் தொடங்கினார்கள். தற்போது திருச்சி கிராப்பட்டியில் செயல்படும் இந்த மையத்தை டானியின் சித்தி நர்கிஸ் நிர்மலா தேவி இயக்குநராக இருந்து கவனிக்கிறார்.
130 பேர் உதவி பெறுகிறார்கள்
அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடவுளின் குழந்தைகள் என்கிறோம். இருக்கும் காலம் வரை அவர்களை மகிழ்வுடன் வைத் திருக்க வேண்டும். டானியின் விருப்பமும் அதுதான். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவரின் வழிகாட்டலில் இங்கு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். சிலருக்கு மாதாந்திர உதவித் தொகையும் தருகிறோம். இப்படி சுமார் 130 பேர் இப்போது எங்களின் உதவிகளைப் பெற்று வருகிறார்கள்.
இவர்கள் கடவுளின் குழந்தைகள்
அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடவுளின் குழந்தைகள் என்கிறோம். இருக்கும் காலம் வரை அவர்களை மகிழ்வுடன் வைத் திருக்க வேண்டும். டானியின் விருப்பமும் அதுதான். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவரின் வழிகாட்டலில் இங்கு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். சிலருக்கு மாதாந்திர உதவித் தொகையும் தருகிறோம். இப்படி சுமார் 130 பேர் இப்போது எங்களின் உதவிகளைப் பெற்று வருகிறார்கள்.
தசைச் சிதைவு பிள்ளைகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதுடன் நல் வாழ்வுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறோம். அந்தப் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஏராளமான உபகரணங்கள் எங்கள் மையத்தில் உள்ளன. ஏழைக் குழந்தைகளாக இருந்தால் சக்கர நாற்காலிகள், தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகள், சிறுநீர் கழிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளையும் நாங்கள் அளித்துவருகிறோம்.
மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம்
ஆண்டுக்கு இரண்டு நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்திப் பரிசளித்தும் விருந்தளித்தும் சுற்றுலா அழைத்துச் சென்றும் இந்தக் கடவுளின் குழந்தைகளை மகிழ்விக்கிறோம். கூடவே, தசைச் சிதைவு நோய் குறித்தும் அந்த நோய் பீடித்த குழந்தைகளை அரவணைப்பது குறித்தும் பொதுமக்க ளிடம் விழிப்புணர்வுப் பிரச் சாரங்களையும் மேற்கொண்டு வருகிறோம்’’ என்று சொன்னார்.
தற்போது இந்த சேவை மையத்தை புதுப்பித்துக் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கவனிப்பாரற்ற தசைச் சிதைவுக் குழந்தைகளைத் தங்க வைப்பதற்காக ‘க்ளினிக்’குடன் கூடிய தங்கும் இல்லம் அமைப்பதை தனது எதிர் காலத் திட்டத்தில் வைத்திருக்கிறது டானியும் நண்பர்களும் நற்சேவை அமைப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT