Published : 29 Jun 2017 10:23 AM
Last Updated : 29 Jun 2017 10:23 AM

உங்கள் பெயருக்குப் பின்னால் ரத்தம் இருக்கிறதா?

தலைப்பைப் பார்த்து மிரள வேண்டாம், நல்ல விஷயம்தான். பெயருக்குப் பின்னால் படிப்பைப் போடுவார்கள், பட்டத்தைப் போடுவார்கள், ஏன், சாதி யைக்கூட போடுவார்கள் ஆனால், பெயருக்குப் பின்னால் தங்கள் ரத்தப் பிரிவை போடுபவர்களை அறிவீர்களா? ஆம், இருக்கிறார்கள். எஸ்.பாலசுப்பிரமணி ‘பி பாசிட்டிவ்’, அலிமா சிக்கந்தர் ‘ஏ பாசிட்டிவ்’, சிவக்குமார் ‘ஓ பாசிட்டிவ்’ என நீள்கிறது இவர்களின் பட்டியல்.

இவர்கள் தங்கள் பெயரை எழுதும் போதும், தங்களின் பெயரைச் சொல்லும் போதும் தங்களது ரத்தப் பிரிவுடன் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். இதுமாத்திரமல்ல, சுமார் 10 ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம் இவர்கள் ரத்ததானம் குறித்த தகவல் களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

எப்படி வந்தது இந்தப் பழக்கம்

இதற்கான விதையை விதைத்தவர் சமூக செயல்பாட்டாளரான எஸ்.பால சுப்பிரமணி ‘பி பாசிட்டிவ்’. “2002-ல் ஒடிசாவில் பணிபுரிந்தேன். அப்போது, ஒரு குழந்தைக்கு ‘ஏ-பி நெகட்டிவ்’ ரத்தம் தேவைப்பட்டது. நான்கு நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்துபோய் வீடு திரும்பிய போது ஏதேச்சையாக பக்கத்து வீட்டுக்காரரின் ரத்தப் பிரிவு

‘ஏ-பி நெகட்டிவ்’ என்று தெரிந்தது. அடித்துப் பிடித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இது எங்கள் மனதை கடுமையாக பாதித்தது.

அந்தப் பாதிப்பில் உதித்ததுதான் இந்தத் திட்டம். மறுநாளிலிருந்தே எனது பெயரை எஸ்.பாலசுப்பிரமணி ‘பி பாசிட்டிவ்’ என்று எழுதவும் சொல்லவும் செய்தேன். ஆரம்பத்தில் ஒருமாதிரியாகப் பார்த்தவர்கள், நோக்கம் தெரிந்தவுடன் பாராட்டினார்கள். பின்பு, பலரும் என்னைப் பின்பற்றி பெயருக்குப் பின்னால் தங்களது ரத்த வகையைச் சேர்த்துக்கொண்டனர். ஒடிசாவின் ராஜதானி கல்லூரி, ஏகாம்ரா கல்லூரி, லயோலா பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் கணிசமான ஆசிரியர் களும், மாணவர்களும் இதைப் பின்பற்றி னார்கள்.’’ என்கிறார் பாலசுப்பிரமணி.

82 நாடுகளில்..

தொடர்ந்து பேசிய அவர், ‘‘பின்னாட் களில் நான் தமிழகம் வந்த பின்பு இது பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆனால், சமூக ஊடகமான ‘வாட்ஸ் அப்’ வந்ததும் அதில் சில குழுக்களைத் தொடங் கினேன். அதிலிருந்து இது பிரபலமானது. உலகெங்கும் 82 நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து இதைப் பின் பற்றுகிறார்கள்.

26 நாடுகளில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து செயல்படும் பெண்களுக் கான அமைப்பு ‘AIYAI (அய்யய்)’. இந்த அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ குழுவில் சுமார் 250 பேர் தங்கள் பெயருக்கு பின்னால் ரத்தப் பிரிவை சேர்த்துள்ளனர். இதேபோல், ‘ஏசியன் தமிழ் ஃபெடரேஷன் வாட்ஸ் அப் குழு’வில் இருக்கும் 42 நாடுகளை சேர்ந்த 160 பேரும், ‘திரைமீளர் குழு'வில் 180 பேரும், ‘தென்புலத்தார் குழு'வில் 250 பேரும் இதைப் பின்பற்றுகிறார்கள்.

உடனடியாக அறியமுடியும்

மதுரையில் ‘பலகரங்கள்’ பெண்கள் அமைப்பின் அலிமா சிக்கந்தர் ‘ஏ பாசிட் டிவ்’, ரத்த தானத்துக்காக சுமார் 4000 பேரின் விவரங்களையும், கோவையில் சிவக்குமார் ‘ஓ பாசிட்டிவ்’, 2,000 பேரின் விவரங்களையும், சென்னையில் செல்வி ‘ஏ பாசிட்டிவ்’, 5,000 பேரின் விவரங் களையும், மதுரை தியாகராசர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் அருணா ராமச் சந்திரன் ‘ஏ1 - பி பாசிட்டிவ்’, 1000 பேரின் விவரங்களையும் சேகரித்து வைத்துள்ள னர். இவர்களின் கைவசம் உள்ள நபர்களில் கணிசமானோரும் இதனைப் பின்பற்றுகிறார்கள். இன்று உலகமெங்கும் சுமார் 10,000 பேர் தங்களது பெயருக்குப் பின்னால் ரத்த வகையைப் போடும் வழக்கத்தை பின்பற்றிவருகிறார்கள். சரி, இதன் மூலம் என்ன பலன்? என்று கேட்கலாம். ரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கும். பலமுறை ஒருவரின் பெயரை அவரது ரத்த வகையோடு சேர்த்து பார்க்கும் போதும் அழைக்கும் போதும் யார் இந்த வகை ரத்தம் என்பது இயல்பாகவே மனதில் பதிந்துவிடும். இதனால் குறிப்பிட்ட வகை ரத்தத்துக்காக தேடி அலையும் நேரம் மிச்சமாகும். தேவையான ரத்தத்தை உடனடியாகப் பெற்று உரிய நேரத்தில் சிகிச்சையளித்து பல உயிர்களை காப் பாற்றமுடியும்.” என்றார்.

இவர்கள் தங்கள் பெயரை எழுதும்போதும், தங்களின் பெயரைச் சொல்லும்போதும் தங்களது ரத்தப் பிரிவுடன் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். இதுமாத்திரமல்ல, சுமார் 10 ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம் இவர்கள் ரத்ததானம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x