Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

சாலையின் குறுக்கே அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள மின்சார ஜெனரேட்டர் லாரி- பொதுமக்கள் அச்சம்

தனியார் கட்டிட பயன்பாட்டுக்காக அரசு விதிகளை மீறி, அதிக திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் பாதுகாப்பற்ற முறையில் சாலை களில் நிறுவப்பட்டுள்ளன. பாரி முனையில் அனுமதியின்றி நிறுத் தப்பட்டுள்ள ஜெனரேட்டர் பொருத் தப்பட்ட லாரியிலிருந்து, சாலை யின் குறுக்கே மின் கேபிள்கள் இணைக்கப்பட்டுள்ளதால், அப் பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர்.

தனியார் விழாக்கள், அரசியல் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஆகி யவை நடக்கும்போது வண்ண விளக்குகள், ஒலி பெருக்கிகள் உள்ளிட்டவற்றை இயங்கவைக்க தனியார் ஜெனரேட்டர்களை பயன் படுத்த அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாரிமுனையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள மூர் தெருவில், தனியார் கட்டிடத்தில் செயல்படும் வட மாநிலத்தவ ரின் வழிபாட்டுத் தலம் அருகில், ஜெனரேட்டர் பொருத்திய லாரி மாதக் கணக்கில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. இந்த லாரியிலுள்ள மெகா ஜெனரேட்டரில், அதிக திறன் கொண்ட மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. இந்த மின்சாரம் சாலையின் குறுக்காக கட்டிடத் துக்கும், லாரிக்கும் இடையில் இணைக்கப்பட்டுள்ள கேபிள் மூலம் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் பாரிமுனை, இரண்டா வது கடற்கரைச் சாலை, மூர் தெரு, அங்கப்பன் தெரு, தம்பு செட்டித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக திறன் கொண்ட ஜென ரேட்டர்கள் பாதுகாப்பற்ற முறை யில், மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு மாறாக சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக சென்னை மாநகரத்தில் உயர்மட்ட மின்சார கேபிள்களை சாலையின் குறுக்கே கொண்டு செல்ல அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி இல்லை.

இதுகுறித்து, மின் துறை ஆய் வுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

ஜெனரேட்டர்களை நிறுவுவது குறித்து பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த பாது காப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஜென ரேட்டர்களை நிறுவும் இடம் மாசு ஏற்படுத்தாத வகையிலும், சம்பந் தப்பட்ட நிறுவனத்துக்கு சொந்த மானதாகவும் இருக்க வேண்டும். பொது இடங்களில் கண்டிப்பாக நிறுவக்கூடாது. தனியார் கட்டிடத் தில் அவசர வழிகளை அடைக்கும் வகையில் இருக்கக் கூடாது.

அரசியல் கட்சி, பொதுவான அமைப்புகள் தங்களது பொது நிகழ்ச்சிகளுக்கு ஜெனரேட்டர் பயன்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்படும். சாலைகளில் லாரி கள் மூலமோ, தனியாகவோ ஜென ரேட்டர் நிறுவக்கூடாது. சாலையின் குறுக்கே எந்தக் காரணத்தைக் கொண்டும் மின் கேபிள் இணைப்பு ஏற்படுத்தக் கூடாது.

மின்சார ஆய்வுத் துறை, மாசு கட்டுப்பாட்டுத் துறை, மாநகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்பு மற்றும் காவல்துறை உள்ளிட்டவற் றில் கண்டிப்பாக லைசென்ஸ் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

பாரிமுனையில் ஆபத்தான முறையில் ஜெனரேட்டர் லாரி நிறுத்தப்பட்டது குறித்து, அப் பகுதி போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “நாங்கள் அவ்வப்போது ஜென ரேட்டர் லாரியை அகற்றுகிறோம். ஆனாலும் எங்களுக்குத் தெரியா மல் மீண்டும் கொண்டு வந்து விடுகின்றனர்” என்றார்.

மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிக ளிடம் கேட்டபோது, “நாங்கள் ஜெனரேட்டர் வைக்க எந்த அனு மதியும் வழங்கவில்லை. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றனர்.

மின் ஆய்வுத் துறை உயரதி காரி ஒருவர் கூறும்போது, “இந்தப் பிரச்சினை குறித்து, பொதுமக்களோ அல்லது அமைப்பு சார்ந்தவர்களோ கூட புகார் அளிக்கலாம். அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x