Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM
தொடர் தோல்விகளில் சிக்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு நம் அரசியல்வாதிகள் சிலரின் யோசனைகள்
ஜெயலலிதா: டீமை மாத்தாம அப்படியே வச்சிட்டிருந்தா இப்படித்தான் தோத்துப் போவீங்க. 4 ஆட்டங்களுக்கு ஒரு முறையாவது வீரர்களை மாத்துங்க. ஓவர் சரியா போட லைன்னா நாலாவது பந்திலேயே அந்த பவுலரை தூக்கிட்டு இன்னொருத்தரை போடுங்க. முடிஞ்சா கார் தர்றோம்னு சொல்லி எதிர் டீம்ல இருந்து ஆட்களை எடுங்க. அணியின் இப்போதைய நிலைக்கு முன்னாள் கேப்டன்தான் காரணம்னு சளைக்காம அறிக்கை விடுங்க. முக்கியமா அணிக்கு புத்துயிர் கொடுக்கும் எனது முயற்சிகளுக்கு கிரிக்கெட் வாரியம் உதவலைன்னு சொல்லி அவங்க மேலயே ஒரு புகார் கடிதம் எழுதுங்க. அப்புறம் பாருங்க கேப்டன் பதவியில இருந்து உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது.
கருணாநிதி: எவ்வளவு நாள்தான் தனி டீமோட ஆடிட்டு இருப்பீங்க? இப்படி தனியா கஷ்டப்படறதுக்கு பதில் ஆஸ்தி ரேலியா, தென் ஆப்ரிக்கான்னு ஏதாவது ஒரு நல்ல டீமா பாத்து கூட்டணிக்கு முயற்சி பண்ணுங்க. அந்த டீம் கேப்டனுக்கு பிடிக்காத யாராவது உங்க டீம்ல இருந்தா உடனே அவரைப்பத்தி, இவரு அநியாயமா பேசினாருன்னு ஓபனா அறிக்கை விடுங்க. இவரு தானாவே வெளியே போயிடுவாரு.
வைகோ: வீரர்களுக்கு பிராக்டிஸ் பத்தாது. அவங்க உடம்பும் பிட்டா இல்ல. அதனால எல்லாரையும் டெய்லி 20 மைல் வாக்கிங் போகச் சொல்லுங்க. நம்ம டீம் தோக்கும்போது சிரிச்சுட்டே நிக்காதீங்க. கதறி அழுங்க. நம்ம வீரர்கள் உங்களை சமாதானப் படுத்தவாவது நல்லா ஆடுவாங்க. அதுவும் இல்லாட்டி எதிரணியாவது உங்களுக்காக பரிதாப்பட்டு விட்டுக் கொடுத்திடும்.
விஜயகாந்த்: அப்பப்ப நாக்க கடிங்க. மோசமா ஆடுற வீரர்கள் தலையில அப்பப்ப ரெண்டு தட்டு தட்டுங்க. எவ்வளவு நாள்தான் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக் கான்னு ஆடிட்டு இருப்பீங்க. ஒரு மாற்றத்துக்கு கிரிக்கெட்டே ஆடாத ஏதாவது ஒரு நாட்டுக்கு போய் கிரிக்கெட் ஆடுங்க. முக்கியமா டாஸ் போடும்போதும் உங்க பதிலை உடனே சொல்லாதீங்க. ஏதாவது வெளிநாட்டுக்கு போய் யோசனை பண்ணிட்டு வந்து நிதானமா சொல்லுங்க. அதுக்குள்ள ஆட்டமே முடிஞ்சு போயிடும். நீங்களும் உங்க பலம் என்னன்னு தெரியாத அளவுக்கு கேம் ஆடிட்டு இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT