Published : 14 Jan 2014 12:00 AM
Last Updated : 14 Jan 2014 12:00 AM
சமீபத்தில் தனியார் மருத்துவ மனைக்குச் சிகிச்சை பெறச் சென்ற ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சென்னை டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாகவோ பரவலாகவோ நடைபெறுவதில்லை. ஆனால், ஒரு சில நபர்கள், டாக்டர் என்று மிகுந்த உரிமை எடுத்துக் கொண்டு எதிர்பாலினரிடம் வரம்பு மீற முற் பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், அவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென நோயாளிகள் அதை பெரிதுபடுத்து வதில்லை. ஆனால், சென்னை சம்பவம் இதைப் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்பட வேண்டிய அவசி யத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ கம் மருத்துவத்துறையில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மிகவும் அரிதானதாக சொல்லப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக குறைந்த செலவில் சென்னையில் செய்யப்படுகிறது.
ஆனால் தனியார் மருத்துவ மனை மற்றும் தனியார் கிளினிக்கு களுக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளிடம் ஒரு சில டாக்டர் கள் வரம்பு மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை பெரும் பாலான பெண் நோயாளிகள் வெளியே சொல்ல தயங்குகின்ற னர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் சிலர், தங் களது அத்துமீறல்களைத் தொடர் கின்றனர்.
ஒரு சில பெண் நோயாளிகள் வெளியே சொல்லும் போது, சம்பந் தப்பட்ட டாக்டர் கைது செய்யப் படுகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி திருவேற்காடு அடுத்துள்ள வேலப்பன்சாவடி பள்ளிக்குப்பம் பகுதியில் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் நோயாளியிடம், அங்கு பணியில் இருந்த டாக்டர் சித்தார்த்தசீலன் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அந்த பெண் திருவேற்காடு போலீஸில் புகார் அளித்ததின் பேரில், டாக்டர் சித்தார்த்தசீலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் தனர். இதுபோல ஒரு சில டாக் டர்கள் செய்யும் தவறால், ஒட்டு மொத்த டாக்டர்களுக்கு மட்டு மின்றி தமிழக மருத்துவத் துறைக்கே அவப்பெயர் ஏற்படு கிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமி, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை ஆர்.எம்.ஓ. டாக்டர் கலை வாணி ஆகியோர் கூறியதாவது:
பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.
பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.
இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்; இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புகார் கொடுக்கலாம்:
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT