Published : 09 Aug 2016 11:14 AM
Last Updated : 09 Aug 2016 11:14 AM
சென்னை சித்தாலப்பாக்கம் ஏரியில் உள் ளாட்சி அமைப்புகளால் கொட்டப் படும் குப்பைகளால் அந்த ஏரி மாசடைந்து வருகிறது என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடிநீர் ஆதாரங் களைப் பாதுகாக்கும் நோக்கில், மக்களின் பங்களிப்புடன் கூடிய ‘குடிமராமத்து’ திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, உள்ளாட்சி நிர்வாகங்களே நீர்நிலை களை மாசுபடுத்தும் செயலில் ஈடுபடுகின்றன. இதை எதிர்த்து பல வழக்குகள் பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகின்றன.
இந்தச் சூழலில் மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்திலும் அங்குள்ள உள்ளாட்சி அமைப்பு குப்பையை ஏரியில் கொட்டிவருவ தாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கூறியதாவது:
பொதுமக்களின் குடிநீர் ஆதார மாக இருந்த சித்தாலப்பாக்கம் ஏரி தற்போது கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கிடையில், பஞ்சா யத்து நிர்வாகம் குப்பையை முதலில் ஏரிக்கரையில் கொட்டியது. எதிர்ப்பு கிளம்பியதும், தற்போது ஏரியின் நடுவில் கொண்டு சென்று கொட்டி, எரித்து வருகின்றனர். இதனால், நீர் மிகவும் மாசுபட்டு வருகிறது. ஏரியில் நீர் இல்லாத போது மாட்டு வண்டியில் வந்து மணல் எடுத்து வந்தனர். இதற்கு செல்லும் பாதை, பஞ்சாயத்து அலு வலகம் எதிரில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘பசுமை தீர்ப்பாய தீர்ப்பால், அங்கு குப்பை கொட்டு வது நிறுத்தப்பட்டது. தற்போது அருகில் உள்ள உரக்குழியில் குப்பைகளை கொட்டுமாறு உள் ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
சாதாரண கட்டண மாநகர பேருந்துகள் குறைப்பு
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாதாரண கட்டண மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள் ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் எஸ்.அப்துல்ரஹ்மான் கூறியதாவது:
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் இயக்கப் பட்ட சாதாரண கட்டண பேருந்துகளின் எண் ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின் றனர். குறிப்பாக, புதுவண்ணாரப்பேட்டையில் ‘கிராஸ் ரோடு’ எனும் பேருந்து நிறுத்தத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படும்.
ஆனால், சமீபகாலமாக சாதாரண கட்டண பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால், மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, சாதாரண கட்டண பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளை ‘கிராஸ் ரோடு’ பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பயணிகள் புகார் குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக கிளை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை
சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தண்ட பாணி என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தொடர்புகொண்டு தெரிவித்ததாவது:
வளசரவாக்கம், சின்னபோரூரில் அனைத்து பால் பாக்கெட்களும் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதல் விலைக்குத்தான் விற்கப்படுகிறது. ஆவின் பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.2 முதல் ரூ.4 வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். கேட்டால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பதால் கூடுதல் விலைக்கு விற்பதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, “அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில்தான் (எம்.ஆர்.பி.) விற்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என மொத்த கொள்முதல் விற்பனையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறுவது தவறு. மீறி விற்பனை செய்தால் அந்தக் கடைக்காரருக்குப் பால் விநியோகம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளோம். ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து 18004253300 என்ற இலவச தொலைபேசி எண்ணில் நுகர்வோர் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் தொடர்புடைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT