Published : 03 Jan 2017 11:01 AM
Last Updated : 03 Jan 2017 11:01 AM

உங்கள் குரல்: சிவகங்கை புறவழிச் சாலையில் விபத்தைத் தடுக்க ஹைமாஸ் விளக்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

சிவகங்கையில் புறவழிச்சாலை யில் மானாமதுரை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு வசதி (ஹைமாஸ்) அமைத்தும் பயன்பாட்டுக்கு வராததால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் பயணிகள், வாகன ஓட்டிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் சிவகங்கையில் புறவழிச்சாலை யில் நடைபெற்று வருகின்றன. இச்சாலை மதுரை- தொண்டி சாலையில் காளவாசல் அருகே சந்திக்கின்றன. இந்த வட்டச் சாலையில் நாலாபுறமும் இருந்து வாகனங்கள் சந்தித்துச் செல்கின்றன. இந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க உயர் கோபுர மின் விளக்கு வசதியை அமைத்துள்ளனர். இது செயல்பாட் டுக்கு வராததால் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன.

இச்சாலையை கடந்து செல் லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து நிதானமாக செல்வ தற்கு வேகத்தடையும் அமைத்துள்ளனர். ஆனால், தனியார் பேருந்துகள் வசூலை நோக்கமாகக்கொண்டு அசுர வேகத்தில் வழித்தடத்திலிருந்து மாறி மாற்று வழியில் செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க் கும் வகையில் இரவு நேரத்தில் உயர் கோபுர மின் விளக்குகளை எரியச் செய்ய வேண்டும் என பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் காரைக்குடி கோட்ட அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது: மானாமதுரை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன் னும் முழுமை அடையவில்லை. சிவகங்கையில் புற வழிச்சாலையில் சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைத்துள்ளோம். பணிகள் இன்னும் முழுமை அடையாததால் மின் இணைப்பு கொடுக்கவில்லை. சாலை பயன்பாட்டுக்கு வரும்போதுதான் மின் இணைப்பு கொடுக்கப்படும். அதுவரை இச்சாலையை கடக்கும் வாகனங்கள்தான் கவனமாக செல்லவேண்டும் என்றார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x