Published : 13 Jun 2017 09:20 AM
Last Updated : 13 Jun 2017 09:20 AM

மாடுகள் விவகாரத்தில் மத்திய அரசின் தடையால் மிருதங்கம், செண்டை உற்பத்திக்கு இனி மாட்டுத் தோல் கிடைக்காது

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டுமாம் என்பார்களே.. அதுபோல, மாடுகளை கையாள்வது தொடர்பாக அண்மையில் மத்திய அரசு விதித்துள்ள அதிரடி தடைகளால் பாரம்பரியம் மிக்க மிருதங்கம், செண்டை, தாரை, தப்பட்டை இசைக்கருவிகள் செய்யும் தொழிலுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

குடிசைத் தொழில்

செண்டை, மிருதங்கம், தபேலா, தாரை தப்பட்டை உள்ளிட்ட மத்தளக் கருவிகள் தயாரிப்புக்கு பெயர்போன இடம் பாலக்காடு மாவட்டம் பெருவம்பா. இங்கே சுமார் 40 குடும்பங்கள் குடிசைத் தொழில் கணக்காய் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தொழில் படித்துக் கொண்டு இங்கிருந்து புலம் பெயர்ந்த வர்களே திருச்சூர், குருவாயூர், திரு வனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியேறி இத்தொழிலை செய்து வரு கிறார்கள்.

தரமான இசைக் கருவிகள் கிடைக் கும் என்பதால் கேரளாவிலிருந்து மட்டு மின்றி, ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இசை விற் பன்னர்களும் இங்கு வந்து தங்களுக்கு பிடித்தமான இசைக் கருவிகளை முன் கூட்டியே ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

தோல்களில் பலவகை

இந்த இசைக் கருவிகளுக்கு பசுந் தோல், காளைத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் என பல்வேறு விதமான தோல்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு தோலிலும் ஒவ்வொரு வகை யான ஸ்ருதி கிடைக்கும் என்பதால் இசைக் கருவிகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு பகுதிக்கும் விதவிதமான தோல்களை கலந்து பயன்படுத்துகிறார்கள்.

உதாரணத்திற்கு, மிருதங்கத்துக்கு பசுந்தோலே 4 பிரிவுகளாக பயன் படுத்தப்படுகிறது. கேரளத்தின் பிரபல வாத்தியமான செண்டைக்கு காளைத் தோல் பயன்படுத்தப்படுகிறது. எல்லா கருவிகளுக்குமே தோலை இழுத்துக் கட்டுவதற்கு எருமைத் தோலை பயன் படுத்துகிறார்கள். மிருதங்கத்துக்கு மட்டும் சிறப்பாக ’புராண கீடம்’ என்னும் ஒரு வகை கல்லை அரைத்து மாவாக்கி அதை துணியில் சலித்து குழைவான சாதத் துடன் கலந்து பசையாக்கி தோலுக்கு நடுவே வைக்கி றார்கள். இப்படியெல்லாம் பல்வேறு பாரம்பரிய தொழில் நுட்பங்களைக் கொண்டு தான் இங்கே இசைக் கருவிகள் பிரசவிக்கப்படுகின்றன.

காலணிகள், இடுப்புப்பட்டை, பர்ஸ் உள்ளிட்ட வைகளை தயாரிக்க இரண்டாம் தரமான தோல்களை ரசாய னங்களால் வெளுத்த பிறகு பயன் படுத்துகிறார்கள். இந்தத் தோலை இசைக் கருவிகள் செய்யப் பயன்படுத்த முடியாது. நேரடியாக விலங்குகள் அறுமனைக்கு சென்று உடனுக்குடன் அறுத்து உரிக்கப்பட்ட தோல்களின் தரம் பார்த்து வாங்கி, அதை சில படிகாரங்கள் சேர்த்து இசைக் கருவிகள் செய்ய ஏற்ற வகையில் பதப்படுத்தி அதன் பிறகுதான் இசைக் கருவிகளை தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

தடையால் வந்த சிக்கல்

இசைக் கருவிகளுக்கான தோலை வாங்கி பதப்படுத்தி பெருவம்பாவில் உள்ள இசைக் கருவி தயாரிப்பாளர் களுக்கு தருவதற்கென்றே புதுநகரம் மார்க்கெட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். இதுவரை பசுந்தோல் 2500 ரூபாய்க்கும், ஆட்டுத்தோல் 500 ரூபாய்க்கும் எருமைத்தோல் 2500 ரூபாய்க்கும் கிடைத்து வந்தது. ஆனால், மாடுகளை இறைச்சிக்காக சந்தைக்கு கொண்டு வந்து விற்கக்கூடாது என்ற மத்திய அர சின் தடைச் சட்டம் வந்ததுமே நிலைமை இங்கு மாறிவிட்டது.

ஆடு, எருமை தோல்கள் வழக்கம் போல் கிடைத்தாலும் பசுமாடு, காளை மாட்டுத் தோல்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது என்கிறார்கள் தோல் வியாபாரத்தில் இருப்பவர்கள்.

ஜீவாதாரமே பாதிக்கும்

இதுகுறித்து வெட்டக்காடு, பெரு வம்பா தபேலா உற்பத்தியாளரான ஆர்.ராஜன் ‘தி இந்து’விடம் பேசினார். ‘‘முன்பெல்லாம் பசு மாட்டுத் தோலில் பத்துத் தோலை எடுத்து அதிலிருந்து எங்களுக்குத் தேவையான நயமான ஒன்று அல்லது இரண்டு தோலை தேர்வு செய்வோம். ஆனால், இப்போது மார்க்கெட்டில் ஒன்றிரண்டு மாடுகள் வெட்டுப்படுவதே அரிதாகிவிட்டதால் கிடைத்த தோலை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.

இரண்டு மாதத்துக்கு முன்பு வாங்கி பதப்படுத்திய தோல்கள் கைவசம் இருப்பதால் மத்திய அரசு தடையால் இப்போதைக்கு எங்களுக்கு பாதிப் பில்லை. ஆனால், கையிருப்பு தோல்கள் கரைந்துவிட்டால் எங்கள் தொழிலுக்கே மோசம் தான். அடுத்ததாக மழைக் காலம் என்பதால் எங்களுக்கு அவ்வளவாக வேலை இருக்காது. மழைக் காலம் முடிந்த பிறகு அதிகமான வேலைகள் வரும்.

அதற்குள்ளாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் இசைக் கருவிகள் உற்பத்தி பெருமளவு பாதிக்கும் தோல் கிழிந்து பழுதாகி கொண்டுவரப்படும் கருவிகளை சரி செய்து கொடுக்கக்கூட வாய்ப்பிருக்காது என்பதால் எங்களது ஜீவாதாரமும் கேள் விக்குறியாகிவிடும்’’ என்று சொன்னார் ராஜன்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x