Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM
அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் டைலானுக்கு (72) பிரான்ஸ் அரசு அந்நாட்டின் மிக உயரிய கலாச்சார விருது வழங்கி கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ஆரெல்லி பிலிபெட்டி கலாச்சார விருதை வழங்கினார்.
பாப் டைலான் அமெரிக்காவில் 1941 மே 24 ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ராபர்ட் ஆலென் ஜிம்மர்மேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் பாப் டைலான் பாடகர் மட்டுமல்ல. பாடலாசிரியர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
"Blowin' in the Wind" "The Times They Are a-Changin'" உள்ளிட்ட ஆரம்பகாலப் பாடல்கள், அமெரிக்காவின் குடி உரிமைப் போராட்டங்கள் மற்றும் போருக்கு எதிரான இயக்கங்களின் தேசிய கீதமாகப் பாடப்பட்டன.
அரசியல், தத்துவம், சமூகம், இலக்கியம் என பலதரப்பட்ட கருத்துச் செறிவுகள் இவரின் பாடல்களில் பொதிந்திருக்கும்.
ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரின் சுதந்திர விருதை, அதிபர் பராக் ஒபாமாவிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT