Published : 03 Jan 2017 11:07 AM
Last Updated : 03 Jan 2017 11:07 AM

உங்கள் குரல்: நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் விதிமீறும் பேருந்துகளால் பரிதவிக்கும் பயணிகள்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வடக்கு புறவழிச்சாலைக்கு செல்லும் பேருந் துகள், பாலத்தின் முடிவிலுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வராமல், சாலையோரத்தில் நின்று செல்கின் றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் என்று, ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதி யில், திருநெல்வேலி சந்திப்பு வாசகர் கே.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

வண்ணார்பேட்டையில் மட்டு மின்றி திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களிலும் பயணியற் நிழற்குடைகள் அமைந்துள்ள பகு திக்கு பேருந்துகள் பெரும்பாலும் வருவதில்லை. இதனால் போக்கு வரத்து நெரிசல் அதிகரிப்பதோடு, விபத்துகளும் நடைபெறுகின்றன.

அலைபாயும் மக்கள்

வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணார்பேட்டை செல்லப்பாண்டி யன் மேம்பாலம் வழியாக கோவில் பட்டி, சிவகாசி, ராஜபாளையம், மதுரை என, பல்வேறு பகுதிகளுக் கும் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பேருந்து களுக்காக வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத் தின் வடபுறத்தில் அமைக்கப்பட் டுள்ள பயணியற் நிழற்குடையில் பய ணிகள் காத்திருக்கின்றனர். ஆனால், புதியபேருந்து நிலையத் தில் இருந்துவரும் பெரும்பாலான பேருந்துகள், பயணியர் நிழற்குடை அமைந்துள்ள அணுகு சாலைக்கு வராமல், பிரதான சாலையோரம் நின்று செல்கின்றன.

இதனால் பயணியற் நிழற்குடை யில் காத்திருக்கும் பயணிகள் அவசர, அவசரமாக பேருந்துகளை பிடிக்க அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளால் போக்குவரத்தும் தடைபடுகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன.

பயணியற் நிழற்குடை அமைந் துள்ள பகுதிக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வண்ணார் பேட்டை மேம்பாலத்துக்கு கீழ்புறம் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பேருந்துகளிடையே போட்டி

மேலும், திருநெல்வேலி சந்திப்பு- பாளையங்கோட்டை இடையே இயக்கப்படும் பேருந்துகள் வண் ணார்பேட்டையில் பயணிகளை ஏற்றி இறக்க மேம்பாலத்தின் வடபுறமும், தென்புறமும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

ஆனால், தனியார் பேருந்துகள் பலவும் பயணிகளை ஏற்றுவதில் போட்டிபோட்டு குறுக்கும் நெருக்க மாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

உத்தரவுக்கு மதிப்பில்லை

மேம்பாலத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு செல் லும் தனியார் பேருந்துகள், ஏற்கெனவே அகற்றப்பட்ட பயணியற் நிழற்குடை பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கு வது நீடிக்கிறது. இங்கு பேருந்து களை நிறுத்தக் கூடாது என்று அதி காரிகள் உத்தரவிட்டும், அதை தனி யார் பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்று வதில்லை. இதனாலும் வண்ணார் பேட்டையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது.

போலீஸார் இல்லை

மேம்பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பொதுமக்கள் சாலையைக் கடக்க உதவியாக போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அப்பகுதியில் போலீஸாரை பார்ப்பது அரிதாக உள்ளது. சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிதல் குறித் தெல்லாம் விழிப்புணர்வை மேற் கொள்ளும் மாநகர போக்குவரத்து போலீஸார், வண்ணார்பேட்டை மேம்பால பகுதி போக்குவரத்து குளறுபடிகளை தீர்க்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.



*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x