Published : 16 Jan 2017 05:18 PM
Last Updated : 16 Jan 2017 05:18 PM
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வெவ்வேறு மனநிலைகள் சிதறிக் கிடந்தாலும் 'நம்ம ஊர் விளையாட்டுக்கு யார்யாரெல்லாமோ வந்து தடைசொல்றாங்களே' என்று நினைக்கும்போது கோபம் வரத்தான் செய்கிறது.
ஜல்லிக்கட்டை தங்கள் வாழ்க்கையோடு வாழ்க்கையாக கொண்டவர்களின் ஆதங்கத்தை அவர்கள் பேச்சின் வழியே புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அதை எதிர்க்கும் அறிவுபூர்வமான வாதங்களை வைப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் வாதங்களை வைத்தாலும் புரிந்துகொள்வதில் சிக்கல் இல்லை.
ஆனால் அவர்கள் வைக்கும் வாதம் அறிவு மற்றும் அதிகாரத்தின் கணுவிலிருந்து முளைத்த பிறிதொரு கொம்புஆகவே பார்க்கவேண்டியதாக இருக்கிறது.
''எதிலும் அரசியல் செய்யும் ஓட்டுக்காரனே கொஞ்சம் இங்கே வந்து உண்மை நிலை அறிவாயா?'' என்று கேட்கிறது ஒரு பாடல். சல்லிக் கட்டுடா என்று பெயரிடப்பட்ட அந்தப் பாடல் சமீபத்தில்தான் யூடியூப் தளத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது.
''அவன் யாரு இவன் யாரு சொல்ல! அவன் என்ன இவன் என்ன தடைபோட?'' என்று தொடங்கும்போதே ''அதானே'' நம்மையறியாமல் முணுமுணுத்தபடி முழுப்பாடலையும் கேட்க நிமிர்ந்து உட்காருகிறோம்.
தொகுக்கப்பட்ட சில புகைப்படங்களைக்கொண்டே முழுப்பாடலையும் பார்க்க வைத்துள்ளது இதன் சிறப்பு.... அதிலும் காளையைக் குளிப்பாட்டி அதன் நெற்றியில் முத்தமிடும் அந்த இளைஞனின் ஈடுபாடுதான் எவ்வளவு இனிமை! நடுகல்லில் மட்டுமே தற்போது வாழும் ஏறுதழுவிய இன்னொரு இளைஞனின் வீரம் எவ்வளவு அழகு!
ஷ்வரன் இசையில் வடிவரசு வரிகளில், தமிழரின் உயிரில், உணர்வில் கலந்திட்ட சல்லிக்கட்டினை பாதுகாக்கத் துடிக்கும் அந்தப் பாடலை நீங்களும் கேளுங்களேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT