Published : 16 Jun 2017 10:12 AM
Last Updated : 16 Jun 2017 10:12 AM

அரும்பில் விதைக்கப்பட்ட வாசிப்பு வேட்கை: விடுமுறையிலும் நூலகம் செல்லும் குமரி மாவட்ட குழந்தைகள்

மாலை மணி நான்கை கடக்கிறது. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள மாவட்ட மைய நூலகத்துக்குள் படையெடுக் கிறது மாணவர் பட்டாளம். உள்ளே நுழையும்போதே, கோடை விடுமுறை யில் குதூகலிப்பது போன்ற உற்சாக உணர்வு அந்தக் குழந்தைகளிடம்.

முகங்களில் மகிழ்ச்சி ரேகை படர பஞ்சதந்திர கதைகளில் தொடங்கி அப்துல்கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ வரை அள்ளிக் கொண்டு திரும்புகின்ற னர் அந்த வளர் இளம் மொட்டுக்கள். தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. தமிழ் இலக்கிய படைப்புலகில் மறைந்த பின்னும், தன் வலிமையான எழுத்துக்க ளால் வாழ்ந்து கொண்டிருக்கும் சுந்தர ராமசாமி தொடங்கி, பல எழுத்தாளு மைகளை உருவாக்கிய பெருமை இந்த மண்ணுக்கு உண்டு.

ஆனாலும், குமரி மாவட்ட மக்க ளுக்கு வாசிப்பு பழக்கம் என்பது தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் மந்தமே என இலக்கிய வாதிகள் குறைபட்டுக் கொள்வதுண்டு. பொது அறிவுத் தகவல்களில் மட்டும் படித்தவர்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கும் குமரியில் தினசரி தற் கொலைகளுக்கும் பஞ்சமில்லை. குடி நோயாளிகளுக்கும் குறைவில்லை. பெண்ணிய பிரச்சினைகளின் தாக்கத் துக்கும் தப்பவில்லை இந்த மாவட்டம். ஏட்டுக் கல்வி எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்பதற்கான அடை யாளங்களே இவை அனைத்தும்.

இப்படியான சூழலில் தான் குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஓசையின்றி ஒரு வாசிப்பு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 12 ஆயிரம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். இவர்களில் இதுவரை சுமார் 80 ஆயிரம் பேரும் 16 ஆயிரம் ஆசிரியர்களும் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர். இங்கு, 21 கிளை நூல கங்கள், 107 ஊர்ப்புற நூலகங்கள், 5 பகுதி நேர நூலகங்கள், ஒரு மைய நூலகம் என 134 நூலகங்கள் உள்ளன. இவைகள் அமைந்துள்ள பகுதிகளில், அந்தந்த பள்ளிகளின் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசினார் குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ராம்,

“கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நோக்கத்தை புரிந்து கொண்ட மாவட்ட நூலக அலுவலர் தேவகி இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தினார். இப்போது இருவருமே மாறுதலாகி சென்று விட்டனர். ஆனா லும், அவர்கள் விதைத்த விதை விருட்சமாக வளர்ந்து கொண்டிருக் கிறது. நூலகங்களில் பள்ளிப் பிள்ளை களின் கூட்டத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மாணவர்களின் நூலக வாசிப்பு தொடர்பாக பள்ளிகளிலும் ஒரு குறிப் பேடு பராமரிக்கப்படுகிறது. அதில், தினசரி நூலகம் செல்வோர், வாரம் ஒருமுறை, மாதம் ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வருடம் ஒரு முறை என தரம் பிரிக்கப்பட் டுள்ளது. தினசரி நூலகம் செல்வோர் வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரலாம் என்கிற நம்பிக்கை விதையை இந்த அரும்புகளின் மனதில் விதைத்தி ருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

பள்ளிக்கூடங்களில் இருக்கும் நூலகங்கள் தவிர மாதம் தோறும் அருகில் உள்ள நூலகத்தில் இருந்தும் பள்ளிகளுக்கு 250 புத்தகங்கள் வழங்கப் படுகிறது. அதனை அவர்கள் ஒரு மாத காலத்துக்குள் படித்து முடிக்க வேண்டும். சுழற்சி முறையில் அடுத் தடுத்த மாதங்களில் வேறு 250 புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப் படும். வாசிப்பு பழக்கத்தை இன்னும் ஊக்கப்படுத்துவதற்காக ஆசிரியர்க ளுக்கும் மாணவர்களுக்கும்

‘இல்லம் தோறும் நூலகம்’ என்னும் திட்டத்தை யும் கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்.

தங்கள் வீட்டில் அதிக புத்தகங் களை சேகரித்து வைத்துள்ள ஆசிரி யர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசு கொடுத்து அவர்களையும் மற்றவர் களையும் ஊக்கப்படுத்துவதுதான் இந்தத் திட்டம். இத்தகையை தூண்டு தல்களால் தான் பள்ளிக் குழந்தைகளும் வாசிக்கத் துவங்கியுள்ளனர். கோடை விடுமுறையிலும் பெற்றோரை அழைத்துக் கொண்டு பள்ளிக் குழந்தை கள் நூலகம் வருவதை பார்க்கையில் வளரும் தலைமுறை மீது புது நம்பிக்கை பிறக்கிறது.” மனநிறைவோடு சொன்னார் ராம்.

குமரியில் விதைத்த இந்த விதையை இன்னும் கொஞ்சம் விசால மாக தமிழகம் முழுவதும் விதைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x