Last Updated : 07 Jan, 2014 01:36 PM

 

Published : 07 Jan 2014 01:36 PM
Last Updated : 07 Jan 2014 01:36 PM

தனியார் நிறுவனங்களின் பராமரிப்பில் இலவச கழிப்பிடங்கள்

இலவச பொதுக் கழிப்பிடங்களில் நடந்து வரும் கட்டணக் கொள்ளையை ஒழிக்க, சென்னை மாநகராட்சி கழிப்பிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 74.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தின் தலைநகராக சென்னை இருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் 20 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மாநகராட்சி பகுதிகளில், 857 இலவச பொது கழிப்பிடங்கள், 42 கட்டண பொதுகழிப்பிடங்கள் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இலவச பொது கழிப்பிடங்களில் பெரும்பாலானவை, கவுன்சிலர்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் பிடியில் உள்ளதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்த இலவச கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க 2 ரூபாய், மலம் கழிக்க 5 ரூபாய் வசூலிக்கப்படுகின்றன. இதுகுறித்து, பொதுமக்களிடமிருந்து சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, இந்நிலையை மாற்ற சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

மாநகராட்சிக்கு சொந்தமான இலவச கழிப்பிடங்களில் பெரும்பாலானவற்றில் கட்டணக் கொள்ளை நடந்துவருவதாக பொதுமக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

இதனை தவிர்க்க, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இலவச பொது கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடங்கள் அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் தற்போது மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் பொதுகழிப்பிடங்களை பராமரிப்பதால், கட்டணக் கொள்ளை முற்றிலும் ஒழிய வழிவகுக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x