Published : 20 Jun 2015 05:41 PM
Last Updated : 20 Jun 2015 05:41 PM
கட்டுரை:>முதலாளிகளின் விளையாட்டரங்கம்
'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரமேஷ் கருத்து:
இங்கே விளையாட்டு என்பது விளையாட்டகிவிட்டது. யாருக்கும் இங்கே வெட்கமில்லை. BCCI என்பது முற்றிலும் ஒரு தனியார் அமைப்பு அதற்கு அரசு அங்கிகாரம் மட்டும் வழங்கியுள்ளது. அதன் நிர்வாகத்தில் எந்த வெளி நபரும் தலையிடமுடியாது என்பது அதனை ஆரம்பிக்கும் போதே போடப்பட்ட விதி.
ஏன் அப்போதைய அனுமதி அளித்த அதிகாரியோ அமைச்சரோ இதை ஆட்சேபிக்கவில்லை. ஏன் எனில் அப்போது அனுமதி கேட்டவரே கூட அனுமதி அளிக்கும் இடத்தில் இருந்திருக்கலாம். இது இந்தியாவின் தலைவிதி. நன்றாக தெரிகிறது. விதிகள் மீறப்படுகிறது. அரசுக்கு வரி செலுத்துவதில்லை யாருக்கும் பதில் சொல்ல மாட்டார்கள் என்று.
பின் ஏன் அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? இது ஒரு வெளிப்படையான ரகசியம். இதை எல்லாம் பார்க்கும்போது இந்த நாட்டில் குற்றம் செய்வதும் அதனை வெளிப்படையாகவே இல்லை என்பதும் பணக்காரர்களுக்கு சாதாரண விஷயம் என்பதும் பிக்பாக்கெட் அடிப்பவனும் பிட்சை எடுப்பவனும்தான் கடும் குற்றம் செய்தவர்கள் என்று ஆகிறது.
இதற்கெல்லாம் எப்போது விடிவும் விமோசனமும் கிடைக்கும் என்று தெரியவில்லை. எல்லாம் அந்த 'நமோ' நாராயணனுக்கே வெளிச்சம். பாப்போம் வழக்கம் போல் எதாவது நடக்கும் என்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT