Published : 04 Mar 2015 12:42 PM
Last Updated : 04 Mar 2015 12:42 PM
கொல்லாமை, விலங்குகள் நலப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் >மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து இருப்பார்களேயானால் எருமைகள் விதிவிலக்கு எதற்காக...? அந்த விலங்கு என்ன பாவம் செய்தது?
இன்னும் கூடுதலாக ஆடு, கோழி, மீன்... இன்னும் பல மனிதர்கள் உணவாகக் கொள்ளும் உயிர்களுக்கு நலப் பாதுகாப்பு வேண்டாமா..?
உணவு முறை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆட்சி அதிகாரத்தில், முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதால், ஒரு மிகப் பெரிய சமுதாயத்தின் உணவு முறையையே சட்டம் போட்டு தடுப்பது என்பது மக்களாட்சி நாட்டில் சர்வாதிகாரப் போக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித இனத்துக்கு உணவுத் தேவையான, தாவரங்கள் உட்பட அனைத்துமே கொன்றுதான் உட்கொண்டாகவேண்டும். பேசமுடியாது, மனிதர்களைப் போன்று ரத்தம், சதை, எழும்பு இல்லை என்பதற்காக தாவரங்களைப் பிடிங்கி, வெட்டி, வேகவைத்து உண்பது மட்டும் எந்த வகையில் சரியானது..?
வேலைவாய்ப்பு போவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலம் காலமாக கடைப்பிடிக்கின்ற உணவு முறையையே மாற்றச்சொல்வது சர்வாதிகாரமானது. அடுத்த தேர்தல் இதற்கு தகுந்த பதில் சொல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT