Published : 09 Mar 2014 01:00 PM
Last Updated : 09 Mar 2014 01:00 PM

டிஜிபி அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு: பெண்ணுக்கு இழப்பீடு தராததால் நடவடிக்கை

போலீஸ் வாகனம் மோதியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகை தராததால் டிஜிபி அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (45). கடந்த 2009-ம் ஆண்டு டூவீலரில் சென்றபோது போலீஸ் வாகனம் மோதி பலத்த காயமடைந் தார். அவரது முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இழப்பீடு கோரி சென்னையில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் கலைச்செல்வி வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 802 இழப்பீட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை காவல் துறை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால் கலைச்செல்வி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.

இதுகுறித்து விசாரித்த சிறு வழக்குகள் நீதிமன்றம், டிஜிபி அலு வலகத்தில் இருந்து இழப்பீட்டுத் தொகை அளவு மதிப்புள்ள பொருட்களை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், கலைச்செல்வியின் வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகன், டிஜிபி அலுவலகத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்திக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜப்தியைத் தவிர்க்க வேண்டுமானால், நீதிமன்றம் உத்தரவிட்டபடி உரிய இழப்பீட்டுத் தொகையை எனது கட்சிக்காரருக்கு (கலைச்செல்விக்கு) வழங்கும்படி தங்கள் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x