Published : 20 Jun 2015 05:37 PM
Last Updated : 20 Jun 2015 05:37 PM
செய்தி:>முதல்வர் வசுந்தராவுக்கு பாஜக ஆதரவு: ராஜினாமா செய்ய தேவையில்லை என அறிவிப்பு
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சங்கர் கருத்து:
கடந்த 4, 5 நாட்களாக ஊடகங்களில் சுஷ்மாவும், வசுந்தராவும் எந்தெந்த விதங்களில் ஊழல் புரிந்துள்ளனர், அவர்கள் மீறிய சட்ட விதிகளை அலசி ஆராய்ந்து வெளியிட்டபோதிலும் எப்படி பா.ஜ.க.வால் இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடிகிறது? இதற்கு காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை போலும்.
ரயில்வே அமைச்சராக இருந்த பன்சால் நேரிடையாக எந்த ஊழல் புகாரிலும் ஆளாகாமல் அவரது உறவினர் ஒருவர் முறைகேடு செய்ததாக வெளிவந்த குற்றச்சாட்டை வைத்து பன்சால் ராஜினாமா செய்தே ஆகவேண்டும் என்று பா.ஜ.க. போர்க்கொடி தூக்கியதும் அவரை ராஜினாமா செய்ய வைத்தது காங்கிரஸ். ஆனால் இந்த இருவரும் இமாலய ஊழல் புரிந்து இருப்பது தெரிந்தும் வக்காலத்து வாங்குவது ஏற்புடையது சரியல்ல. யார் தவறு செய்தாலும் உடனே நடவடிக்கை எடுத்தால்தான் அது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்ல முடியும்.
கொலைகாரனுக்கும் அவன் தரப்பில் நியாயம் இருக்கும். அதற்காக அவனை விட்டுவிடுவார்களா? அது மாதிரி செய்தது தவறு என்று நிரூபணம் ஆனபிறகு கதை சொல்லுவது நல்ல ஆட்சியாளர்களுக்கு சரியல்ல. எது எப்படியோ சமீபகாலங்களில் மோடியின் மதிப்பு மக்கள் மத்தியில் கடுமையாக சரிந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT