Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM
நம் முன்னோர்களும் பரந்து விரிந்த அரசாங்கத்துக்குச் சொந்தக்காரர் களுமான சோழ மன்னர்கள், தங் களை முற்றிலுமாக இறைத் தொண்டுக்கு அர்ப்பணித்துக்கொண் டவர்கள். தங்கள் அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய கோயில்களையும் பழைய கோயில் களுக்கான திருப்பணிகளையும் செய்தவர்கள்.
கோயில் பணிகள் தங்கள் காலத்துடன் முடிந்து விடக்கூடாது என்பதற்காக சந்திர சூரியர் உள்ள ளவும் தொடர வேண்டிய அளவுக்கு, பல்வேறு நிவந்தங்களை - கட்டளை களைச் செய்துவிட்டு போயிருக் கிறார்கள் சோழ மன்னர்கள். அவர் களின் கால் படாத சிவாலயங்களே நாட்டில் இல்லை எனலாம்.
அப்படி அவர்களின் வழிபாட் டுக்கு உரியதாக இருந்த நூற்றுக் கணக்கான கோயில்கள் பின்னா ளில் சிதிலமடைந்து இல்லாமலே போய்விட்டன. சில கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் வழிபாடு கள் இல்லாமல் வழக்கொழிந்து இன்னமும் இருக்கின்றன. அத் தகைய கோயில்களைத் தேடி வழி பாட்டுக்குரியதாக மாற்றும் வேலை யில் தன்னை அர்ப்பணித்துக் கொண் டிருக்கிறது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டம்.
இந்த இறைப் பணி கூட்டத்தார் ஒருங்கிணைந்த தஞ்சை, பெரம்ப லூர், அரியலூர் ஆகிய மாவட்டங்க ளில் இதுவரை 25க்கும் மேற்பட்ட சிதிலமடைந்த கோயில்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஊர் மக்கள் மற்றும் சில உதவியாளர்கள் மூலமாக சீரமைத்து வழிபாட்டுக் குரியதாக மாற்றியிருகிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட கோயில்க ளுக்கு குடமுழுக்கு செய்திருக் கிறார்கள்.
இவர்கள்தான் தற்போது நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புத்தகரம் என்னும் இடத்தில் சோழர் கால சிவாலயம் ஒன்றை சிதிலமடைந்த நிலையில் கண்டறிந்திருகிறார்கள்.
பட்டவர்த்தி அருகேயுள்ள இந்த புத்தகரத்தில் ஊரின் தெற்கு புறத்தில் குட்டைகுளம் என்ற குளத்தின் மேல்கரையில் சிதைவுற்ற நிலையில் இந்த சிவாலயம் காணப்படுகிறது. இக்கோயில் கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே விடப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. கோயிலின் உள்ளே வழிபடு மூர்த்திகள் எதுவும் இல்லை.
அது பற்றி அவ்வூர் மக்கள் பலரிடமும் தொடர்ந்து பேசியதன் அடிப்படையில், இக்கோயிலுக்குத் தெற்குப் பகுதியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக திருக்கூட்டத்தாருக்கு தகவல் கிடைத்தது.
அதை ஊர் மக்கள் உதவியோடு தேடிக் கண்டுபிடித்தார்கள். அது சோழர் காலத்தைச் சேர்ந்த சிவலிங் கத் திருமேனி. அத்துடன் சிதில மடைந்த நிலையில் பிரம்மனின் திருமேனியும் அருகிருந்தது. அத னைச் சுற்றிலும் மக்கள் உதவியோடு சுத்தம் செய்து சிவலிங்க திரு மேனிக்கு திங்கள்கிழமை அபிஷே கம் உள்ளிட்ட வழிபாடுகளையும் திருக்கூட்டத்தார் செய்ய ஆரம்பித்த னர். விரைவில் கோயிலை சீரமைக் கவும் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி ‘தி இந்து’விடம் பேசிய ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக் குடில் சுவாமிகள், “இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு வழிபாட்டுக்கு உரியதாக இருந்திருக் கிறது. அவர்களின் காலத்துக்குப் பிறகு சிதிலமடைந்த இக்கோயிலை சீரமைத்தவர்கள் ஏதோ காரணங்க ளால் பாதியில் விட்டிருக்கிறார்கள்.
அவருக்குப் பின் வந்தவர்கள் எவரும் இப்பணியைத் தொடராமல் அப்படியே விட்டுவிட்டார்கள். புனித மானதும், பெருமைக்குரியதுமான இக்கோயிலில் விரைவில் மக்கள் உதவியுடன் அன்றாட வழிபாடுகளை யும், உழவாரப் பணிகளையும் தொடங்க உத்தேசித்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT