Published : 07 Jan 2014 01:32 PM
Last Updated : 07 Jan 2014 01:32 PM

சான்றிதழ்களை தவிர்த்தால் போலியை ஒழித்து கோடியை சேமிக்கலாம்: ஆம் ஆத்மி கமிட்டி உறுப்பினர் யோசனை

ஆன் - லைனிலேயே மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உடனுக்குடன் சரிபார்க் கும் புதிய முறை அமலுக்கு வர இருப்பது குறித்து நேற்றைய ’தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது.

’’இந்த யோசனையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி நான் ஒரு வருடத்திற்கு முன்பே அரசுக்கு தெரியப்படுத்தினேன் ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை’’ என்று ஆதங்கப் படுகிறார் மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி. அதி காரியான பாலாஜி. ஆம் ஆத்மி கட்சியில், ஊழலை ஒழிக்கும் 7 பேர் கொண்ட கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர் பாலாஜி. ரூபாய்க்கு பதிலாக புள்ளிகளை பயன்படுத்தினால் ஊழலை ஒழித்துவிடலாம் என்ற ஆக்கப்பூர்வமான யோசனையை மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சொன்னவர். இவர்தான், போலி மதிப்பெண் சான்றிதழ்களை ஒழிக்க கடந்த

2012-ம் ஆண்டு அக்டோபரில் ஆக்கப்பூர்வமான யோசனை ஒன்றை எழுத்துப்பூர்வமாக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு ‘தி இந்து’விடம் பேசிய பாலாஜி, ‘’போலி மதிப்பெண் பட்டியல், போலி டி.சி. தயாரித்து பல பேர் மோசடியாய் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு சேர்கிறார்கள். மதிப்பெண் சான்றிதழ்களையும் டி.சி-யையும் பள்ளிக் கல்வி சம்பந்தப்பட்டதாக இருந்தால் அவர்களின் இணையதளத்திலும் உயர் கல்வித் துறையாக இருந்தால் அந்தக் கல்லூரி எந்த அரசினுடைய கல்லூரித் துறையின் கீழ் வரு கிறதோ அவர்களின் இணைய தளத் திலும் வெளியிடலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் தேவை எனில் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அங்கீ கரிக்கப்பட்ட கோர்ஸை எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இணைய தளத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்படும் என்பதால் போலி மற்றும் அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பணத்தைக் கட்டிப் படித்துவிட்டு ஏமாந்து நிற்கும் அவலமும் தவிர்க்கப்படும். இதுமட்டுமல்ல, சான்றிதழ்களை பிரிண்ட் செய்வதற்காகவும் அதை தபாலில் அனுப்பி வைப்பதற்காகவும் ஆண்டுதோறும் அரசு கோடிக் கணக்கில் பணம் செலவு செய்துக் கொண்டிருக்கிறது.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ - மெயில் மூலம் தெரிவித்தேன். 4 முறை போனிலும் தொடர்புகொண்டு பேசினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. படிப்புச் சான்றிதழ்கள் மட்டுமல்ல.. பிறப்புச் சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்ட இன்னும் பல விஷங்களை இணைய தளத்தில் மட்டுமே பதிந்து வைப்பதன் மூலம் போலிகளை ஒழிப்பதோடு கோடிகளையும் மிச்சப்படுத்தலாம். பாஸ்போர்ட்டையும் இதே முறையில் ஆன் - லைனிலேயே வைத்துக் கொள்ளமுடியும்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x