Published : 22 Nov 2013 10:37 AM
Last Updated : 22 Nov 2013 10:37 AM
1954 - சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
(1878 டிசம்பர் 10- 1972 டிசம்பர் 25)
தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தலைவர். முதல் பாரத ரத்னா விருதை பெற்ற பெருமைக்குரிய அவர், சென்னை மாகாண பிரதம மந்திரி, நாட்டின் முதல் கவர்னர்-ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாண முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.
1954 - சர் சந்திரசேகர வெங்கடராமன்
(1888 நவம்பர் 7 - 1970 நவம்பர் 21)
தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயற்பியல் துறை விஞ்ஞானி. “ராமன் விளைவு” என்ற அவரது ஒளிச் சிதறல் ஆய்வுக்காக 1930-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1954- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(1888 செப்டம்பர் 5 - 1975 ஏப்ரல் 17)
நாட்டின் 2-வது குடியரசுத் தலைவர். தமிழகத்தைச் சேர்ந்த அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1955- பகவான் தாஸ்
(1869 ஜனவரி 12 - 1958 செப்டம்பர் 18)
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். சம்ஸ்கிருதம், ஹிந்தியில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
1955- ஜவஹர்லால் நேரு
(1889 நவம்பர் 14 - 1964 மே 27)
நாட்டின் முதல் பிரதமர். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர். மிகச் சிறந்த ஆங்கில நூலாசிரியரும்கூட. அவரது பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1955- சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா
(1860 செப்டம்பர் 15 – 1962 ஏப்ரல் 14)
கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர். கிருஷ்ணராஜ சாகர் அணை, மைசூர் சிவசமுத்திரத்தில் உள்ள ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் ஆகியவை இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை. அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தேசிய பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1957- கோவிந்த் வல்லப் பந்த்
(1887 செப்டம்பர் 10 – 1961 மார்ச் 7).
உத்தர பிரதேசத்தின் முதல் முதல்வர். சுதந்திரப் போராட்டத் தலைவர். இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
1958- தோண்டோ கேசவ் கார்வே
( 1958 ஏப்ரல் 18 – 1962 நவம்பர் 9)
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி. மகளிர் நலனுக்காக தீவிரமாகப் போராடியவர். விதவையை மணம் முடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT