Published : 27 Sep 2014 09:21 AM
Last Updated : 27 Sep 2014 09:21 AM
திமிங்கில கழிவான அம்பர், வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த பொருளாகும். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வளம் சேர்க்கும், திமிங்கிலத்தின் அம்பர் மீதான தடையை நீக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூமிப்பந்தில் வாழும் உயிரினங்களிலேயே மிகப் பெரிய உயிரினம் திமிங்கிலம். திமிங்கிலங்களில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கிலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிப்பதில்லை. மனிதர்களைப் போலவே அவற்றுக்கு நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருப்பதுடன் இரைதேடி 2,000 மீட்டர் ஆழம் வரையிலும் செல்லக்கூடிய ஆற்றல் திமிங்கிலங்களுக்கு உண்டு.
மெழுகு போன்ற திரவம்
திமிங்கிலங்களின் விருப்ப உணவு கணவாய் மீன்கள் ஆகும். கூரிய ஓடு களைப் பெற்ற கணவாய் மீன்களைச் சாப்பிடும்போது ஜீரண சக்திக்காக ஒருவிதமான மெழுகு போன்ற திர வத்தை திமிங்கிலங்கள் உருவாக்கு கின்றன. பின்னர் அந்த எச்சம் திமிங் கிலத்தின் உடலிலிருந்து கழிவுகளாக வெளியேறுகிறது.
திமிங்கிலங்கள் வெளியேற்றும் கழிவுகளுக்கு 'அம்பர்' என்று பெயர். கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது உருண்டை வடிவம் பெற்று கடற்கரையில் அம்பர்கள் ஒதுங்குகின்றன. இவ்வாறு கரையில் ஒதுங்கும் அம்பர்களை கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிறத்துக் கேற்ப மீனம்பர், பூவம்பர் மற்றும் பொன்னம்பர் என மீனவர்கள் அழைக்கின்றனர்.
விலை உயர்ந்த வாசனை திரவியம் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கு அம்பர் பயன்படுவதால் ஒரு கிலோ அம்பர் அதன் நிறத்துக்கேற்ப பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விலைபோகிறது.
தற்போது திமிங்கிலத்தின் அம் பரை சேகரிப்பதற்கு தடை உள்ளது. இயற்கையாகவே கடற்கரையில் ஒதுங்கும் ஒரு சிறிய அம்பர் உருண்டையை கண்டெடுத்தால்கூட அதுவே அந்த மீனவரின் வாழ்நாள் பொக்கிஷமாக மாறிவிடும்.
தடை ஏற்படுத்தப்பட்டது
இது குறித்து சமூக ஆர்வலர் தாஹிர் சைபுதீன் கூறியதாவது: ‘உலகெங் கிலும் 18, 19-ம் நூற்றாண்டுகளில் திமிங்கிலங்கள் கொழுப்பு எண்ணெய் க்காக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. 1940-ம் ஆண்டில் சர்வதேச அளவில் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கண்டறியப்பட்டு திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946-ம் ஆண்டு சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 1986-ம் ஆண்டு திமிங்கிலங்களைப் பிடிக்க உலகெங்கிலும் தடை ஏற்படுத் தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவிலும் அம்பர் சேகரிப்பு மீதான தடை தவறான புரிதல் அடிப் படையில் ஏற்படுத்தப்பட்டது.
இயற்கையாகவே கடலில் ஒதுங் கும் திமிங்கிலங்களின் கழிவுகளைச் சேகரிக்க பாரம்பரிய மீனவர்களுக்கு உரிமை உண்டு. திமிங்கிலம் உயி ருடன் இருந்தால்தான் அதன் கழிவு கள் கிடைக்கும் என்பதுதான் அடிப் படையான அறிவு.
ஜப்பான், நார்வே மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் திமிங்கிலங்களை வேட்டையாடு வதில் முதன்மையான நாடுகள். சர்வ தேச சட்டங்களில் உள்ள ஓட்டை களைப் பயன்படுத்தி திமிங்கில வேட்டை மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் வருவாயை இந்த 3 நாடுகளும் ஈட்டுகின்றன. எனவே கரையில் ஒதுங்கும் அம்பர் சேகரிப்பை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய மீனவர்களின் எதிர்பார்ப்பு’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT