Published : 12 Sep 2018 07:46 AM
Last Updated : 12 Sep 2018 07:46 AM
தெலங்கானாவில் மலைப்பாதையில் சென்ற அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் குடும்பத் தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளது மாநில அரசு.
தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டம் கொண்டகட்டு பகுதியில் இருந்து நேற்று காலையில் அரசு பஸ் ஒன்று ஜகித்யாலாவுக்கு சென்று கொண்டி ருந்தது. கொண்டகட்டு பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என சுமார் 80 பேர் இந்த பஸ்ஸில் பயணம் செய் தனர். மலைப்பகுதியில் இருந்து இறங்கும் போது கடைசிவளைவில் இருந்த வேகத் தடை மீது பஸ் வேகமாக ஏறியதால் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக பலத்த சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பலர் பஸ்ஸின் இருக்கைகளுக்கு இைடயே சிக்கி உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் தங்களை காப்பாற்றும்படி அலறினர். தகவல் அறிந்ததும் ஜகித்யாலா மாவட்ட ஆட்சியர் சரத், எஸ்பி சிந்து ஷர்மா, ஜகித் யாலா போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத் துக்கு விரைந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர், கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன.
மீட்புப் பணியின்போது 25 பேர் சடலங் களாக மீட்கப்பட்டனர். மேலும், படுகாய மடைந்த 50-க்கும் மேற்பட்டோர் ஜகித் யாலா, கரீம் நகர் மற்றும் ஹைதராபாத் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட னர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 31 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 56 ஆக அதிகரித்தது. இதில் 32 பேர் பெண்கள், 7 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர். படுகாயமடைந்தவர்களில் மேலும் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்த ஒருவர் 9 மாத கர்ப்பிணியாவர். விபத்தின்போது இவருக்கு பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதேபோல 7 மாத கர்ப்பிணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேகத்தடையே காரணம்
கொண்டகுட்டு மலைப்பகுதியில் இருந்து 3 கிமீ தூரத்தில் அடிவாரம் உள்ளது. அங்கிருந்து 500 மீட்டர் தூரத் துக்கு முன்பு உள்ள ஒரு வளைவில் எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருப் பதற்காக, வேகத்தடை மீது அதே வேகத் தில் பஸ்ஸை இடது புறம் திருப்பியதால் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத் தில் பஸ் கவிழ்ந்ததாக உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இடைக்கால முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கேட்டறிந்தார். இதையடுத்து, இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
இந்த விபத்தில் பஸ் ஒட்டுநர் ஸ்ரீநிவா ஸுக்கு இரு கால்களும் உடைந்ததால், அவர் ஜகித்யாலா அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீநிவாஸ், சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சிறந்த ஓட்டுநருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து ஜகித்யாலா அரசு பஸ் பணிமனை மேலாளர் ஹனுமந்த ராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் சிறந்த அரசு பஸ் பணிமனை மேலாளருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் இதுவரை நடைபெற்ற பஸ் விபத்துகளில் இது மிகப்பெரிய விபத்து ஆகும்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலங்கானா பஸ் விபத்து குறித்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செய்வார்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில், “தெலங் கானா விபத்து குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங் களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர் கள் விரைவில் குணமடைய இறை வனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “உயி ரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன்” என கூறியுள்ளார்.
இதேபோல், தெலங்கானா மாநில ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில டிஜிபி மகேந் தர் ரெட்டி கூறும்போது, “இந்த கோர விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். விபத்துக்குக் காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT