Published : 26 Sep 2018 09:15 AM
Last Updated : 26 Sep 2018 09:15 AM

தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனைக்கு தேசிய அளவிலான தர அங்கீகாரம்: சாதனையை சமுதாயத்துக்கு அர்ப்பணிப்பதாக இயக்குநர் தகவல்

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனைக்கு தேசிய அளவிலான தர அங்கீகாரம் கிடைத்துள்ளது. இச்சான்றிதழைப் பெறும் முதல் சித்த மருத்துவமனை இதுவாகும்.

நாட்டிலுள்ள கல்வி நிறுவனங் களின் தரத்தை மதிப்பீடு செய்து தேசிய அளவில் ‘ரேங்க்’ அளிக்கப் படுவது போல், மருத்துவமனை களையும் மதிப்பீடு செய்து தேசிய தர அங்கீகாரம் அளிக் கப்படுகிறது. இதற்கான பணி யில் மத்திய அரசு சார்பில், மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பிடம் தர அங்கீகாரம் கேட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை நிறுவனம் விண்ணப்பித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அங்கீகார வாரியம், தேசிய அளவிலான தரத்தை வழங்கியுள்ளது.

இந்த மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கும், நாள் பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். காலையில், 8 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல் படுகிறது.

மேலும் சர்க்கரை நோய், முதியோர்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் இங்கு செயல்படுகிறது. இங்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால், புதிய சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.31.65 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் வெ.பானுமதி கூறிய தாவது:

2004-ம் ஆண்டு தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 1 கோடி பேருக்கு மேல் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தரமான மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனை களுக்கு அங்கீகாரம் வழங்கும், டெல்லியில் உள்ள தேசிய தரக் கட்டுப்பாட்டு கவுன்சிலின் அங்க மான என்ஏபிஎச் அமைப்புக்கு, தாம்பரம் சித்த மருத்துவமனை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த அமைப்பு கடந்த, 2 ஆண்டுகளாக மருத்துவமனையில் உள்ள தீ தடுப்பு முறை, உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை பல முறை ஆய்வு செய்தது. தர அமைப்பின் முக்கியமான பல அம்சங்களை ஆய்வு செய்த என்ஏபிஎச் அமைப்பு தாம்பரம் சித்த மருத்துவமனைக்கு தேசிய அளவிலான தர அங்கீகாரம் அளித்துள்ளது.

சித்த மருத்துவமனைகளில் தாம்பரம் தேசிய மருத்துவமனை முதல் முறையாக இந்த அங்கீ காரத்தை பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது. இங்கு அனைத்து நோயாளிகளுக்கும் பொருளா தார பாகுபாடின்றி ஒரே மாதிரி யான நெறிமுறைகளைக் கடைப் பிடித்து, தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாள்பட்ட நோய்களுடன் வரும் மக்களின் சிகிச்சைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் இம் மருத்துவமனை சேவை புரிகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த சாதனையையும் சமுதாயத்துக்கே அர்ப்பணிக்கின்றோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x