Published : 11 Sep 2018 08:03 AM
Last Updated : 11 Sep 2018 08:03 AM
ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 வரை குறைக்கப்படுமென நேற்று அமராவதியில் நடந்த சட்டப் பேரவையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
அமராவதியில் நேற்று நடை பெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையேற்றத் தால், பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதற்காக ஆந்திர மாநில மக்களின் கஷ்டத்தை சற்று குறைக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீது ரூ.2 குறைக்கப்படுகிறது. இந்த புதிய விலை மாற்றம் செவ்வாய்க்கி ழமை காலை முதல் மாநிலமெங்கும் அமலுக்கு வருகின்றது. வாட் வரியை குறைப்பதால், மாநிலத் திற்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆயினும் மக்கள் நலன் கருதி இந்த முடிவை அரசு அமல்படுத்துகிறது. இதேபோன்று, மக்கள் நலனின் அக்கறைகொண்டு மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீது வரியை குறைக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 ஆண்டுகளில் அதிக அளவு உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதன் காரணமாக இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப் படுகிறது. இதற்கு பொதுமக்க ளின் ஆதரவும் கிடைத்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையேற்றத் தால், மக்கள் மீது கூடுதல் சுமை விழுகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கை களையும் மேற்கொள்ள வில்லை.
2014-ம் ஆண்டில், கச்சா எண் ணையின் விலை சர்வதேச அளவில் ஒரு பீப்பாய் 105.5 டாலராக இருந் தது. தற்போது 72.23 டாலர்களாக உள்ளது. 2014-ல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.49.60 பைசாவாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86.71 பைசாவாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது வரியை குறைக்காமல், நாளுக்கு நாள் ஏற்றும் முறையை மத்திய அரசு கடைப்பிடித்தது. இதனால் பொதுமக்கள் பொருளா தாரரீதியாக பாதிக்கப்பட்டு வருகின் றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.23 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால், மக்கள் மீது சுமையை ஏற்றி விட்டது. உடனடியாக பெட்ரோல், டீசல் விலையின் மீதுள்ள வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT