Published : 06 Jun 2019 02:06 PM
Last Updated : 06 Jun 2019 02:06 PM

பனையூரிலிருந்து கேரளா, ஆந்திரா செல்லும் நூல் கயிறுகள்: தொழிற்கூடமான சீமைக் கருவேல மரங்கள்

சீமைக் கருவேல் மரங்களை தொழிற்கூடமாகக் கொண்டு மதுரை பனையூரில் உற்பத்தி செய்யப்படும் நூல் கயிறு, கேரளா, ஆந்திராவுக்கு கயிறாகவும், விளக்குத் திரியாகவும் அனுப்பப்படுகிறது.

மதுரை அருகேயுள்ள பனையூரில் நூல் கயிறு உற்பத்தி தொழிலில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலாளர் களுக்கு இக்கிராமத்தை சுற் றியுள்ள காட்டுப் பகுதியில் வ ளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களே தொழிற்கூடமாக உள்ளன. மழைக்காலம் தவிர்த்து மற்ற நாட்களில் இம்மரத்தடி நிழலில் நூல் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு மங்களகரமான தாலி க்கயிறு, கோயில்களில் விளக் குகள் ஏற்றுவதற்குரிய திரி, வீட்டு உபயோகத்துக்கான நூல், துடைப்பத்துக்குரிய கயிறுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், கால்நடைகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, பிடி கயிறு, கழுத்துக்கயிறு, சிறு குழந்தைகளுக்குத் தேவையான தொட்டில் கயிறுகள் உற்பத்தி செய் யப்படுகின்றன. இதனைத் தவிர்த்து கப்பலுக்கு தேவைப்படும் கயிறுகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும் இங்கு தயாராகும் நூல் கயிறு கேரளா, ஆந்திரா மாநில ங்களுக்கு விளக்குத் திரியாகவும், துடைப்பம் தயாரிக்கவும் அனுப்ப ப்படுகிறது. தற்போது தேவை அதிகம் இருப்பதால் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து பனையூரைச் சேர்ந்த தவசு (48) கூறியதாவது:

எங்களிடம் நூற்கண்டாக கொடுப்பதை கயிறாக உருவாக்கித் தருவோம். சுமார் 6 அடி முதல் 60 அடி நீளமுள்ள கயிறாகவும், 60 மீ நீளமுள்ள கயிறு என அளவுக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி தருகிறோம். இங்கிருந்து கேரளாவுக்கு விளக்குத்திரியாகவும் செல்கிறது. ஆந்திரா மாநிலத்துக்கு துடைப்பத்துக்கான நூல் கயிறையும் தயாரித்து அனுப்புகிறோம்.

இதனை உற்பத்தி செய்வதற்கு கிலோவுக்கு ரூ. 8 வீதம் கூலி கிடைக்கும். குறைந்தது 2 லிருந்து 3 பேர் சேர்ந்து ஒரு நாளைக்கு 200 கிலோ உற்பத்தி செய்வோம்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.500 கூலி கிடைக்கும். சீமைக்கருவேல் மரங்களே தொழிற் கூடமாக இருப்பதால் மழைக் காலங்களில் தொழில் பாதிக் கும்.

அந்த சமயங்களில் கடன் வாங்கி சமாளிப்போம். எனவே, நிரந்தரத் தீர்வாக மழைக்காலங்களிலும் தொழில் தடையின்றி நடைபெற தொழிற்கூடாரம் அமைத்து தர அரசு முன்வர வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x