Published : 23 Apr 2014 09:10 AM
Last Updated : 23 Apr 2014 09:10 AM
மின்னணு ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையிலும், புத்தகங்கள் மீதான பிரியம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. புத்தகங் களை மாணவர்களிடமும், வீட்டில் உள்ள பெண்களிடமும் கொண்டு சேர்த்ததில் லெண்டிங் லைப்ரரி களின் பங்கு முக்கியமானது. ஆனால் அனைத்தும் டிஜிட்டல்மய மாக மாறி வரும் உலகில், வாடகை நூலகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
40 ஆண்டு பாரம்பரியம்
சென்னை தி.நகரில், பிரம்மாண்ட மாக எழுந்துள்ள கடைகளுக்கு இடையில் மிக அமைதியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிராஜ் லெண்டிங் லைப்ரரி இயங்கி வரு கிறது. அதை நடத்திவரும் ரவிராஜ் கூறியதாவது:
இது என் கடைதான். சில ஆண்டு களுக்கு முன்புவரை, ஆட்களை வைத்து கடையை நடத்தி வந்தேன். அவர்கள் ஏமாற்றிவிட்டதால் நானே எடுத்து நடத்துகிறேன். எனக்கு 3 பிள்ளைகள். அனைவரும் படித்து நல்ல நிலையில் உள்ளனர். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவன் நான். வேறு ஏதாவது தொழில் செய்திருந்தால், இன்னும் நல்ல நிலைக்கு வந்திருக்கலாம். ஆனால் மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இதை நடத்துகிறேன்.
‘நெஞ்சில் நீங்காத சுஜாதா, சாவி’
முன்பெல்லாம் பலர் வந்து புத்தகம் வாங்கிச் செல்வார்கள். எப் போதும் கூட்டமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் பலர் ஆங் கிலம், தமிழ் இரு மொழிகளிலும் புத்தகங்களை விரும்பிப் படிப் பார்கள். பல பிரபலங்கள் இங்கு வந்து புத்தகங்கள் வாங்கியிருக் கிறார்கள். கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன், ஜி.ஆர்.டி. நிறுவனத்தை சேர்ந்த ராஜேந்திரன், டி.வி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த ப்ரீதா ரத்தினம் என அனைத்து துறையை சேர்ந்தவர்களும் இங்கு வந்து புத்தகம் வாங்கி செல்வார் கள். சுஜாதா, சாவி, சிட்னி ஷெல்ட னின் புத்தகங்கள் இன்றும் பிரபல மானவை.
இவ்வாறு ரவிராஜ் கூறினார்.
மலரும் நினைவுகள்
அம்பத்தூரில் இருந்து இந்த கடைக்கு வந்திருந்த ராணி, ‘‘6 ஆண்டுகளாக இங்கு வருகிறேன். வீட்டருகில் சில கடைகள் இருந்தா லும் இங்குதான் தொடர்ந்து வரு கிறேன். ரமணி சந்திரன் கதைகள் மிகவும் பிடிக்கும். எனது பிள்ளை கள் வேலைக்கு செல்வதால், அதிகம் படிப்பதில்லை. நான் வாரா வாரம் இங்கு வந்துவிடுவேன்’’ என்றார்.
தன் பள்ளிப் பருவத்தில் ரவிராஜ் லெண்டிங் லைப்ரரியை பயன்படுத் திய மஹாலட்சுமி (51) கூறுகையில், “நான் பள்ளியில் படிக்கும் போதிருந்தே நண்பர்களுடன் இந்த கடைக்கு வருவேன். அப்போது மாடியிலும் கடை இருக்கும். லட்சுமி, சிவசங்கரியின் கதைகளையும் பொன்னியின் செல்வன் நாவலை யும் இங்கு வந்துதான் படித்தேன். சிவசங்கரியின் ‘ஒரு மனிதனின் கதை’ ரொம்ப பிடிக்கும்.
கல்லூரி காலத்தில் மில்ஸ் அண்ட் பூன், எனிட் ப்லைடன், சில்ஹவுட் ரொமான்ஸ் ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. மில்ஸ் அண்ட் பூன் எனது கல்லூரி நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறேன்’’ என்றார்.
மூடப்படும் சோகம்
இப்படிப்பட்ட லெண்டிங் வாடகை நூலகங்கள் சென்னையில் தற் போது மூடப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் பல கிளைகள் கொண்ட ஈஸ்வரி வாடகை நூலகம் தற்போது மூடப்பட்டு வருகிறது. ரவிராஜும் தனது லைப்ரரிய தொடர்ந்து நடத்த இயலவில்லை என்கிறார். ‘‘கடைக்கான மாத வாட கையைக்கூட கட்ட இயலவில்லை. மூடிவிடலாம் என்று தோன்றுகிறது.
என்ன செய்வதென்று தெரிய வில்லை. இப்போது வாடகை நூலகம் வந்து படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. கல்லூரி மாணவர்களைவிட மாணவிகள் ஒரு சிலர் ரொமான்டிக் த்ரில்லர் புத்தகங்களை படிக்கிறார்கள். கோடை விடுமுறையில் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் செல்கின் றனர்’’ என்றார்.
இன்று உலக புத்தக தினம். புத்தகம் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அந்த சுகத்தை அடுத்த தலைமுறை உணர்ந்தால், நூல்களோடு நூலகங்களும் வாழும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT