Published : 22 Mar 2018 09:53 AM
Last Updated : 22 Mar 2018 09:53 AM
க
ண்ணாடி அணியாமல் எளிய கண் விழிப்பயிற்சி மூலம் பார்வை குறைபாட்டை போக்குகிறது புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பயிற்சி மையம். இந்த இலவச சேவையால், கண்ணாடி யைத் துறந்தவர்கள் ஏராளம்.
புதுச்சேரி கடற்கரை சாலை அருகே லல்லி தொலாந்தால் வீதி யில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரவிந்தர் ஆசிரமம் கட்டுபாட்டில் உள்ளது இந்த பயிற்சிப் பள்ளி. 7 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண் சிமிட்டுதல் போன்ற பார்வை குறைபாட்டினை மருந்து மாத்திரைகள் இன்றி, எளிய கண்விழிப் பயிற்சி மூலமே நிவர்த்தி செய்கின்றனர்.
இதுபற்றி பயிற்சி மையத்தினர் கூறும்போது, "எளிமையான முறையில்தான் பயிற்சி இருக்கும். உலகம் முழுவதுமிருந்து மக்கள் வருகின்றனர். கட்டாயம் 6 நாட்கள் தங்கி இருந்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டுக்குச் சென் றும் இந்த பயிற்சியை தொடர வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக் கும்" என்கின்றனர்.
தொடர்ந்து 6 நாட்கள் காலை மற் றும் மாலை 2 மணி நேரம் முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது, சூரிய ஒளியில் கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்துதல் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்துதல் என பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி பெற வருவோர் auroeyesight@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்து, அதில் கிடைக்கும் பதிலுடன் வர வேண்டும். திங்கள்கிழமை வாரவிடுமுறை. அரசு விடுமுறை நாட்கள், ஆசிரம தர்ஷன் நாட்களில் மையம் செயல்படாது. குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் இறுதி வாரம் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. குழந்தைகளாக இருந்தால் 7 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் வரும் போது ஆவணங்களாக குழந்தைகளுக்கு பிறப்புச் சான்று, மருத்துவர் மருந்துச் சீட்டு சான்று, கண்ணாடி அணிந்திருந்தால் அதை எடுத்து வர வேண்டும்.
தொடர் பயிற்சி மூலம் கண்ணாடிக்கு விடை கொடுக்கலாம் என அனுபவப்பட்டவர்கள் கூறுவதால், கண்ணாடியை விரும்பாதவர்கள் புதுச் சேரிக்கு வரலாம். இந்த விழிப்பயிற்சி பலரின் வாழ்வில் விளக்குகளை ஏற்றி வைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT