Published : 04 Apr 2019 04:28 PM
Last Updated : 04 Apr 2019 04:28 PM
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபாலால் தகுதி நீக்கம் செய்தார். இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஏ.கே.போஸ், திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மு.கருணாநிதி ஆகியோரின் மறைவு காரணமாக இரண்டு தொகுதிகளும் காலியாகின. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது.
மேலும் ஒசூர் தொகுதி எம்எல்ஏ குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பாலகிருஷ்ணா ரெட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்தது. தற்போது நடக்க உள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து இந்த 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
ஆனால், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பாக வழக்குகள் உள்ளதால், அவை தவிர மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதியே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மினி பொதுத் தேர்தலாக வர்ணிக்கப்படும் 18 தொகுதி இடைத் தேர்தல் குறித்து பார்க்கலாம். 18 தொகுதிகளின் நிலவரம், சமூக அமைப்பு, வாக்கு வங்கி உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிலவரம்
1) அதிமுக தனித்துப் போட்டி
2) திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கூட்டணி
3) தேமுதிக, தமகா, மதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி
4) பாமக தனித்து போட்டி
5) பாஜக ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி
6) நாம் தமிழர் தனித்துப் போட்டி
ஆனால் தற்போது நடைபெறும் தேர்தலில் கூட்டணிகள் முற்றிலும் மாறியுள்ளன. அதிமுகவுடன், பாமக, பாஜக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம் கூட்டணிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
திமுக கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அணி அமைத்துள்ளன.
புதிதாக தினகரன் தலைமையிலான அமமுக, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளிலும் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்:
1) பூந்தமல்லி (தனி)
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குள் அமைந்துள்ளது பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 11763 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
ஏழுமலை | அதிமுக | 103952 | 43.32 |
பரந்தாமன் | திமுக | 92189 | 38.41 |
பார்த்தசாரதி | பாமக | 15827 | 6.59 |
கண்ணன் | மதிமுக | 15051 | 6.27 |
அமர்நாத் | பாஜக | 3456 | 1.44 |
பொன்னரசு | நாம் தமிழர் | 2562 | 1.07 |
2) பெரம்பூர்
வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இந்த சட்டப்பேரவை தொகுதி பெருமளவு தொழிலளர்கள் நிறைந்த பகுதி. கடந்த தேர்தலில் கடும் இழுபறி ஏற்பட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றது. 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவேல் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
வெற்றிவேல் | அதிமுக | 79974 | 42.39 |
தனபாலன் | திமுக | 79455 | 42.11 |
சவுந்தரராஜன் | சிபிஎம் | 10281 | 5.45 |
பிரகாஷ் | பாஜக | 4582 | 2.43 |
வெங்கடேஷ் பெருமாள் | பாமக | 3685 | 1.95 |
வெற்றி தமிழன் | நாம் தமிழர் | 3236 | 1.72 |
3) திருப்போரூர்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோதண்டபாணி 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
கோதண்டபாணி | அதிமுக | 70215 | 34.91 |
விஸ்வநாதன் | திமுக | 69265 | 34.44 |
வாசு | பாமக | 28125 | 13.98 |
சத்யா | மதிமுக | 25539 | 12.70 |
ரங்கசாமி | பாஜக | 2605 | 1.30 |
எல்லாலன் யூசுப் | நாம் தமிழர் | 1836 | 0.91 |
4) சோளிங்கர்
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 9732 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொகுதி 3வது இடம் பிடித்த பாமக 50 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகள் பெற்றது
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
பார்த்திபன் | அதிமுக | 77651 | 36.79 |
முனிரத்தினம் | காங்கிரஸ் | 67919 | 32.18 |
சரவணன் | பாமக | 50827 | 24.08 |
மனோகர் | தேமுதிக | 6167 | 2.92 |
குமார் | பாஜக | 1468 | 0.70 |
செந்தில் குமார் | நாம் தமிழர் | 826 | 0.39 |
5) குடியாத்தம் (தனி)
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் தொகுதியில் 11470 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
ஜெயந்தி பத்மநாபன் | அதிமுக | 94689 | 48.56 |
ராஜமார்தாண்டன் | திமுக | 83219 | 42.68 |
தீபா | பாமக | 7505 | 3.85 |
லிங்கமுத்து | சிபிஐ | 3140 | 1.61 |
கணேசன் | ஐஜேகே | 891 | 0.46 |
ராஜ்குமார் | நாம் தமிழர் | 876 | 0.45 |
6) ஆம்பூர்
வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி 28006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
பாலசுப்பிரமணி | அதிமுக | 79182 | 49.16 |
நஸிர் அகமது | மமக | 51176 | 31.77 |
வாசு | தேமுதிக | 7043 | 4.37 |
வெங்கடேசன் | பாஜக | 5760 | 3.58 |
ஆமின் பாஷா | பாமக | 4643 | 2.88 |
கலைகாமராஜ் | நாம் தமிழர் | 574 | 0.36 |
7) ஒசூர்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒசூர் தொகுதி தமிழகத்தின் எல்லைப்புற பகுதி. தமிழுடன், தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களும் கணிசமாக வசிக்கும் தொகுதி இது. அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி 22964 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு மூன்றாவது இடம் பிடித்த பாஜக கணிசமான வாக்குகளை பெற்றது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
பாலகிருஷ்ண ரெட்டி | அதிமுக | 89510 | 41.59 |
கோபிநாத் | காங்கிரஸ் | 66546 | 30.92 |
பாலகிருஷ்ணன் | பாஜக | 28850 | 13.40 |
முனிராஜ் | பாமக | 10309 | 4.79 |
சந்திரன் | தேமுதிக | 7780 | 3.61 |
அலெக்ஸ் எஸ்தர் | நாம் தமிழர் | 3021 | 1.40 |
8) பாப்பிரெட்டிபட்டி
தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டியில் அதிமுகவுடன், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவர் இங்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுகவை பின்னுக்கு தள்ளி பாமகா 61521 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
பழனியப்பன் | அதிமுக | 74234 | 35.56 |
சத்தியமூர்த்தி | பாமக | 61521 | 29.47 |
பிரபு ராஜசேகர் | திமுக | 56109 | 26.88 |
பாஸ்கர் | தேமுதிக | 9441 | 4.52 |
அசோகன் | கொமதேக | 1760 | 0.84 |
மூவேந்தன் | நாம் தமிழர் | 588 | 0.28 |
9) அரூர் (தனி)
தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரூர் தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகன் 11421 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மூன்றாவது இடம் பிடித்த விசிக 33 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகளை பெற்றது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
முருகன் | அதிமுக | 64568 | 33.96 |
ராஜேந்திரன் | திமுக | 53147 | 27.95 |
கோவிந்தசாமி | விசிக | 33632 | 17.69 |
முரளி | பாமக | 27747 | 14.59 |
சுருளி ராஜன் | கொமதேக | 3500 | 1.84 |
வேதியப்பன் | பாஜக | 1948 | 1.02 |
ரமேஷ் | நாம் தமிழர் | 627 | 0.33 |
10) நிலக்கோட்டை (தனி)
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் தங்கதுரை 14776 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
தங்கதுரை | அதிமுக | 85507 | 48.99 |
அன்பழகன் | திமுக | 70731 | 40.52 |
ராமசாமி | தேமுதிக | 7666 | 4.39 |
அழகுமணி | பாஜக | 2565 | 1.47 |
ராமமூர்த்தி | பாமக | 2201 | 1.26 |
சங்கிலிபாண்டியன் | நாம் தமிழர் | 1204 | 0.69 |
11) திருவாரூர்
நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக தலைவர் கருணாநிதி 68366 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்கு வங்கி உள்ளது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
மு.கருணாநிதி | திமுக | 121473 | 61.73 |
பன்னீர்செல்வம் | அதிமுக | 53107 | 26.99 |
மாசிலாமணி | சிபிஐ | 13158 | 6.69 |
சிவகுமார் | பாமக | 1787 | 0.91 |
சந்திரசேகர் தென்றல் | நாம் தமிழர் | 1427 | 0.73 |
ரெங்கதாஸ் | பாஜக | 1254 | 0.64 |
12) தஞ்சாவூர்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி இது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய புகாரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று. பிறகே இங்கு தேர்தல் நடத்தப்பட்டது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
ரெங்கசாமி | அதிமுக | 101362 |
அஞ்சுகம் பூபதி | திமுக | 74488 |
ராமலிங்கம் | பாஜக | 3806 |
அப்துல்லா | தேமுதிக | 1534 |
நல்லதுரை | நாம் தமிழர் | 1192 |
குஞ்சிதபாதம் | பாமக | 794 |
13) மானாமதுரை (தனி)
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி 14889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
மாரியப்பன் கென்னடி | அதிமுக | 89893 | 48.45 |
சித்ரா செல்வி | திமுக | 75004 | 40.43 |
தீபா அன்பழகன் | விசிக | 7493 | 4.04 |
ராஜேந்திரன் | பாஜக | 3493 | 1.88 |
சத்யா | நாம் தமிழர் | 2997 | 1.62 |
14) ஆண்டிப்பட்டி
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் போட்டியிட்டு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது. அமமுகவின் முன்னணி தலைவராக தற்போது இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கி 30196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
தங்க தமிழ்செல்வன் | அதிமுக | 103129 | 51.93 |
மூக்கையா | திமுக | 72933 | 36.72 |
கிருஷ்ணமூர்த்தி | தேமுதிக | 10776 | 5.43 |
சக்கரவர்த்தி | பாஜக | 3465 | 1.74 |
ஆனந்தபாபு | நாம் தமிழர் | 1318 | 0.66 |
ரவி | பாமக | 817 | 0.41 |
15) பெரியகுளம் (தனி)
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் இது. பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், 2009-ம் ஆண்டு இந்த தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு போடி தொகுதிக்கு மாறினார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் கதிர்காமு 14350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
கதிர்காமு | அதிமுக | 90599 | 46.94 |
அன்பழகன் | திமுக | 76249 | 39.51 |
லாசர் | சிபிஎம் | 3525 | 7.01 |
செல்லம் | பாஜக | 5015 | 2.60 |
புஷ்பலதா | நாம் தமிழர் | 1048 | 0.54 |
கண்ணன் | பாமக | 1025 | 0.53 |
16) சாத்தூர்
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் சுப்பிரமணி 4427 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
சுப்பிரமணி | அதிமுக | 71513 | 40.65 |
ஸ்ரீனிவாசன் | திமுக | 67086 | 38.13 |
ரகுராமன் | மதிமுக | 25442 | 14.46 |
ஞானபாண்டியன் | பாஜக | 3407 | 1.94 |
முத்துவேல் நாச்சியார் | நாம் தமிழர் | 1520 | 0.86 |
பசுபதி தேவன் | பார்வர்டு பிளாக் | 958 | 0.54 |
பாலகிருஷ்ணன் | பாமக | 768 | 0.44 |
17) பரமக்குடி (தனி)
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பரமகுடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தையா 11389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
முத்தையா | அதிமுக | 79254 | 46.89 |
திசைவீரன் | திமுக | 67865 | 40.15 |
பொன். பாலகணபதி | பாஜக | 9537 | 5.64 |
இருளன் | விசிக | 3780 | 2.24 |
ஹேமலதா | நாம் தமிழர் | 2655 | 1.57 |
தங்கராஜ் | பாமக | 690 | 0.41 |
18) விளாத்திகுளம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 18718 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
உமா மகேஸ்வரி | அதிமுக | 71496 | 46.79 |
பீமராஜ் | திமுக | 52778 | 34.54 |
கதிர்வேல் | தாமக | 15030 | 9.84 |
ராமூர்த்தி | பாஜக | 6441 | 4.22 |
மருதநாயகம் | நாம் தமிழர் | 1766 | 1.16 |
முனிசாமி | பாமக | 560 | 0.37 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT