Last Updated : 22 Feb, 2019 12:22 PM

 

Published : 22 Feb 2019 12:22 PM
Last Updated : 22 Feb 2019 12:22 PM

தடகளம் துப்பாக்கி...சாதிக்கும் மாணவிகள்!

தடகளம், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதிக்கின்றனர் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள  கல்லார்  சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி மாணவிகள். இப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் எஸ்.பொன்சிவப்பிரியா தடகளத்திலும், பிளஸ் 2 மாணவி ஸ்ரீதவதன்யா துப்பாக்கி சுடுதலிலும் அசத்தி வருகின்றனர்.

பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார் பொன்சிவப்பிரியா. இதன் மூலம் தேசிய தடகள அணிக்கான தேர்வு முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவர்.

இதேபோல, திருச்சியில் நடைபெற்ற மாநில தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், ஜனவரி மாதம் புனேவில் நடைபெற்ற  ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் வெள்ளி, 2018 அக்டோபரில் கர்நாடக மாநிலம் தாவங்கரேவியில் நடைபெற்ற,  சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையி

லான தடகளத்தில் 800 மீட்டத்தில் ஓட்டத்தில் தங்கம், சென்னையில் நடைபெற்ற சிபிஎஸ்இ கிளஸ்டர்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, கோவையில் நடைபெற்ற மாவட்ட தடகளப் போட்டியில் 400, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் என இவரது பதக்கப் பட்டியல் பெரியது.

“எனது சொந்த ஊர் கரூர் . 4-ம் வகுப்பு முதலே தடகளத்தில் ஆர்வம். பயிற்சியாளர் வீரப்பன் அளித்த பயிற்சி, மாவட்ட, மாநில, தேசியப்  போட்டிகளில் பதக்கம் வெல்ல உறுதுணையாக உள்ளது. பெற்றோர் சத்தியானந்தன், நித்தியானந்தி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர்  தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்” என்றார் பொன்சிவப்பிரியா பெருமிதத்துடன்.

ஓட்டத்தில் மட்டுமின்றி, கூடைப்பந்து, ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, நடனம், கல்வி என இவர் சகலகலாவல்லி என்கின்றனர் பள்ளியில்.

சும்மா.... சுட்டுத் தள்ளு....

இதேபோல, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சாதித்து வருகிறார் மாணவி ஸ்ரீதவதன்யா. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற, தேசிய அணிக்கான தேர்வுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு சம்மேளனம் சார்பில்,  2018-ல் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக ஜூனியர் பெண்கள் பிரிவில் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தெலங்கானாவில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம், சென்னையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர்   3-பொசிசன் போட்டியில் இரு தங்கம், வெள்ளி, 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் வெண்கலம் என பல பதக்கங்களை வென்றுள்ளார்.

“எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது என்.சி.சி.யில் சேர்ந்து துப்பாக்கி களைக் கையாளப் பழகியபோதுதான், துப்பாக்கி சுடுதல் மீதான ஆர்வம் ஏற்பட்டது. அந்த முகாமில், துப்பாக்கி சுடுதலில் முதலிடம் பிடித்ததே, இப்போட்டியில் எனது முதல் வெற்றி.பின்னர், கோவை ரைஃபிள் கிளப்பில் சேர்ந்து, பயிற்சியாளர் வெங்கடாசலபதியிடம் பயிற்சி பெறத் தொடங்கினேன். நான் இடம் பெற்ற ஏர் ரைஃபிள் குழு, மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது. கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் வென்றது.

எனது பெற்றோர் பாலகுமாரன்-மகேஸ்வரி. விவசாயக் குடும்பம்.  எனது பெற்றோருடன், பள்ளிச் செயலர் முனைவர் கவிதாசன், கல்வி ஆலோசகர் வி.கணேசன், முதல்வர் ஆர்.உமாமகேஸ்வரி, துணை முதல்வர் எஸ்.சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர் ஜெ.ஜெரால்டு ஆரோக்கியராஜ் ஆகியோரும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். அது,  எனக்கு பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தி

யுள்ளது.துப்பாக்கி சுடுதலில் சாதிக்க, தொடர் பயிற்சி அவசியம். தற்போது பிளஸ் 2 படித்து வருவதால், போட்டி தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு மட்டுமே பயிற்சி மேற்கொள்கிறேன். தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை

சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக தொடர் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது குறிக்கோள்” என்றார் ஸ்ரீ தவதன்யா தன்னம்பிக்கையுடன். 

thada-3jpg

கல்வியும், விளையாட்டும் இரு கண்களாய்...

“கல்வியில் சாதிப்பது மட்டும் சாதனையல்ல. விளையாட்டுகளில் வெல்வதும் சாதனைதான். நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சியும், விளையாட்டுகளும் பெரிதும் உதவும். ‘உடலை வலிமையுடன் வைத்துக்கொண்டால், சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும். மேலும், எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகும்’ என்று பள்ளித் தலைவர் கே.ராமசாமி அடிக்கடி கூறுவார்.

இதனால் படிப்புடன், விளையாட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பள்ளியில்  ரைஃபிள் கிளப், சாலை பாதுகாப்பு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்களின் திறமை வளரும்” என்றார் பள்ளிச் செயலர் கவிதாசன்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x